பொது செய்தி

தமிழ்நாடு

பாசனக்குழாய் அடைப்பு நீக்க 'அட்மா' திட்டத்தில் பயிற்சி

Added : செப் 13, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே உள்ள வரப்பாளையத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டம் சார்பில், சொட்டுநீர் பாசன முகாம் நடந்தது.கோவை உள் மாவட்ட அளவிலான இம்முகாமில், விவசாயிகளுக்கான சொட்டு நீர் பாசனம் அமைத்தலின் முக்கியத்துவம் குறித்து, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.இதில், சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளை விவசாயிகள்

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே உள்ள வரப்பாளையத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டம் சார்பில், சொட்டுநீர் பாசன முகாம் நடந்தது.கோவை உள் மாவட்ட அளவிலான இம்முகாமில், விவசாயிகளுக்கான சொட்டு நீர் பாசனம் அமைத்தலின் முக்கியத்துவம் குறித்து, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.இதில், சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளை விவசாயிகள் கடைப்பிடிப்பதால், குறைந்த நீரில், அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி, அதிக உற்பத்தியை பெறலாம் என விளக்கப்பட்டது. மேலும், பாசனக் குழாய்களில் உப்பு அடைப்பு ஏற்படுவதை தடுக்க, அமிலம் பயன்படுத்தி அதனை நீக்குதல் மற்றும் குழாய்கள் மேலாண்மை முறைகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.இம்முகாமில், பெரியநாயக்கன்பாளையம் துணை வேளாண்மை அலுவலர் விஜய கோபால், தமிழ்நாடு வேளாண் பல்கலை உழவியல் துறை பேராசிரியர் நடராஜன், கோவை மாவட்ட நுண்நீர் பாசன திட்ட துணை வேளாண்மை இயக்குனர் ஷபி அகமது உள்ளிட்டோர் பங்கேற்று, சொட்டுநீர் பாசனம் குறித்த பல்வேறு தகவல்களை விவசாயிகளுக்கு விளக்கினர்.வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா, தமிழக அரசின் பல்வேறு வேளாண் திட்டங்கள், மானியங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை, அட்மா திட்ட அலுவலர்கள் தங்கமணி, புனிதா ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X