தனி நபர் கழிப்பறை பாழ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனி நபர் கழிப்பறை 'பாழ்'

Added : செப் 13, 2021
Share
ஆர்.கே.பேட்டை : ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட தனி நபர் கழிப்பறைகள், பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ளன. இதனால், அரசின் திட்டம் குறித்த விழிப்புணர்வு, பொதுமக்களிடம் ஏற்படவில்லை என, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும், தன் சுத்தம் குறித்த அக்கறையுடனும், தனி நபர் கழிப்பறைகள், ஊராட்சி

ஆர்.கே.பேட்டை : ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட தனி நபர் கழிப்பறைகள், பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ளன.

இதனால், அரசின் திட்டம் குறித்த விழிப்புணர்வு, பொதுமக்களிடம் ஏற்படவில்லை என, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும், தன் சுத்தம் குறித்த அக்கறையுடனும், தனி நபர் கழிப்பறைகள், ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.இதன் மூலம், திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்கும் அவலம் தவிர்க்கப்படும் என்பது திட்டத்தின் குறிக்கோள். 100 நாள் வேலை திட்டத்தின்கீழ், கட்டப்பட்ட இந்த கழிப்பறைகள், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.இதனால், திட்டத்தின் நோக்கம் குறித்த விழிப்புணர்வு, பொதுமக்களிடம் எற்படவில்லையே என, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X