பொது செய்தி

தமிழ்நாடு

'சாத்ரா விஸ்வகர்மா விருது ': பொறியியல் மாணவர்கள் தேர்வு

Added : செப் 13, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி மாணவர்கள், 'சாத்ரா விஸ்வகர்மா விருது' பெற்றுள்ளனர்.புதுடில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கழகம், ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப மாதிரிகளை உருவாக்குவதில் முதன்மை வகிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த, 2017ம் ஆண்டு முதல், 'சாத்ரா விஸ்வகர்மா விருது' வழங்கி வருகிறது.கடந்த, 2019 - 20ம்
 'சாத்ரா விஸ்வகர்மா விருது ': பொறியியல் மாணவர்கள் தேர்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி மாணவர்கள், 'சாத்ரா விஸ்வகர்மா விருது' பெற்றுள்ளனர்.புதுடில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கழகம், ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப மாதிரிகளை உருவாக்குவதில் முதன்மை வகிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த, 2017ம் ஆண்டு முதல், 'சாத்ரா விஸ்வகர்மா விருது' வழங்கி வருகிறது.கடந்த, 2019 - 20ம் கல்வியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மீட்பு மற்றும் இயல்பு நிலைக்கு திரும்புதல் திட்டம் என்ற தலைப்பில் தொழில்நுட்ப மாதிரிகளை விருதுக்காக வரவேற்றது.பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 950 மாணவர்கள் பங்கேற்றனர். தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடு அடிப்படையில், 24 மாணவர் அணியினர் இவ்விருதுக்காக தேர்வு செய்யப்பட்டனர்.பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி, அகில இந்திய அளவில் இரண்டு விருதுகள் பெற்றுள்ளது.தகவல் தொழில்நுட்பத்துறை மாணவியர் நாராயணி, ஹர்ஷினி, ஐஸ்வர்யா கணேஷ், வாழ்வாதார பொருளை உறுதி செய்வதற்காக மறு சீரமைப்பு அல்லது மேம்பட்ட திறன் என்ற பிரிவில் இரண்டாமிடத்தையும்; மின்னியம் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் தாணு அரவிந்த், பத்மநாபன், கார்த்திக், விஷ்ணுராஜ் ஆகியோர், மன ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக ஆதரவு என்ற பிரிவில் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.புதுடில்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.மாணவர்களை கல்லுாரி நிர்வாகத்தினர், செயலர், முதல்வர் மற்றும் துறை தலைவர்கள், செயல்திட்ட ஆலோசகர்கள், கல்லுாரியின் இன்னோவேஷன் கவுன்சில் மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X