பொது செய்தி

தமிழ்நாடு

புதர் மண்டிய துணை மின் நிலையம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
பொன்னேரி : துணை மின் நிலையத்தில், மின் மாற்றிகள், பீடர்களை சுற்றிலும் புதர் மண்டி இருப்பதால், அங்குள்ள விஷ ஜந்துக்களை கண்டு, ஊழியர்கள் அச்சம் அடைந்து, மின் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.பொன்னேரி துணை மின் நிலைய வளாகத்தில் மின் மாற்றிகள், பீடர்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. மின் நிலையத்தில், 30
 புதர் மண்டிய துணை மின் நிலையம்

பொன்னேரி : துணை மின் நிலையத்தில், மின் மாற்றிகள், பீடர்களை சுற்றிலும் புதர் மண்டி இருப்பதால், அங்குள்ள விஷ ஜந்துக்களை கண்டு, ஊழியர்கள் அச்சம் அடைந்து, மின் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

பொன்னேரி துணை மின் நிலைய வளாகத்தில் மின் மாற்றிகள், பீடர்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. மின் நிலையத்தில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான மின் பயனீட்டாளர்கள் உள்ளனர்.மின் நிலைய வளாகத்தில் எங்கு பார்த்தாலும் புதர் மண்டி கிடக்கிறது. ஆலாடு, வேண்பாக்கம் பகுதிகளுக்கு மின்சாரம் செல்லும் பீடர்களை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து இருக்கின்றன.மேற்பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகள் வரை கொடிகள் பரவி இருக்கின்றன.

இதனால், சீரான மின் வினியோகமும் பாதிக்கும்.மேலும், பீடர்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், புதரில் உள்ள பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை கண்டு ஊழியர்கள் அங்கு செல்ல அச்சப்படுகின்றனர். இரவு நேரங்களில், மின் பழுதுகளை சரி பார்ப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.இங்குள்ள மின் பொருட்களை பாதுகாக்கும் கிடங்கு, மின் கட்டணம் செலுத்துமிடம், கண்காணிப்பு அறை, பிரிவு அலுவலகஙகள் ஆகியவற்றை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன.மின் கட்டணம் செலுத்த, மின் இணைப்பு பெற, புகார் தெரிவிக்க வரும் பொதுமக்கள் அங்குள்ள புதர்களை கண்டு அச்சம் அடைகின்றனர்.துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, ஊழியர்கள் அச்சமின்றி பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X