பொது செய்தி

இந்தியா

26 டி.எம்.சி., காவிரி நீர்: கர்நாடகா இழுத்தடிப்பு

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை-தமிழகத்திற்கு 26.3 டி.எம்.சி., நீரை வழங்காமல், கர்நாடகா நிலுவை வைத்துள்ளதால், சம்பா பருவ நெல் சாகுபடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், முறைப்படி நீரை வழங்காமல் கர்நாடகாஇழுத்தடிக்க துவங்கி

சென்னை-தமிழகத்திற்கு 26.3 டி.எம்.சி., நீரை வழங்காமல், கர்நாடகா நிலுவை வைத்துள்ளதால், சம்பா பருவ நெல் சாகுபடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.



latest tamil news


தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், முறைப்படி நீரை வழங்காமல் கர்நாடகாஇழுத்தடிக்க துவங்கி உள்ளது.ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி.,க்கு பதிலாக 7.69 டி.எம்.சி.,யும், ஜூலையில் 31.2 டி.எம்.சி.,க்கு பதிலாக 27.9 டி.எம்.சி.,யும் வழங்கப்பட்டது. ஆக., மாதம் 45.9 டி.எம்.சி.,க்கு பதிலாக 22.6 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இம்மாதம் 36.7 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். இதுவரை 11.5 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, ஜூன் முதல் 69.8 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்கியுள்ளது. 8ம் தேதி நிலவரப்படி, கர்நாடகா வழங்க வேண்டிய நீரின் நிலுவை 26.3 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது.தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், விரைவில் சம்பா பருவ நெல் சாகுபடி காலம் துவங்கவுள்ளது. சேலம், மேட்டூர் அணையில் நீர் இருப்பு 38.1 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது. இதனால், சம்பா சாகுபடி பாசனத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
13-செப்-202112:10:55 IST Report Abuse
Kumar எந்த நீரையும் தமிழ்நாட்டில் சேகரிக்க மாட்டோம். ஒரு அடி நிலத்துக்குக் கூட புதிதாக நீர்பாசன வசதி செய்து தரமாட்டோம். ஆனால் எங்களுக்கு காவிரி நீர் வேண்டும்,கடலில் விட. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
13-செப்-202112:04:17 IST Report Abuse
S.Baliah Seer காவிரி நதிநீர் விவகாரத்தில் சட்டம் சரியாக இருந்தும், அரசியல் காரணங்களுக்காக மத்திய பாஜக அரசு நதிநீர் வழங்குவதை நடுவர் குழுவுக்கு விடாமல் கர்நாடக மாநில அரசிடம் விட்டுவைத்திருப்பது அயோக்கியத்தனம். நதிநீர் ஒரு நாட்டின் சொத்து.மாநில சொத்தல்ல.
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
13-செப்-202113:31:03 IST Report Abuse
Hariஅய்யா புண்ணியவான் காவேரிக்கு ஆரம்பம் முதல் இன்றுவரை முழுதும் கொடுமை செய்து துரோகம் இழைத்தவர் மகனை சேரில் உட்க்காரவைத்து இப்படி நேற்றுவந்த பி ஜெ பி ஏய் குறை சொல்லுவது பொருந்தவில்லை ,வரலாறை படித்தபின் உங்கள் ஒருதலை பட்சமான ஆதரவை சொல்லுங்கள்....
Rate this:
Cancel
13-செப்-202111:10:03 IST Report Abuse
ஆரூர் ரங் கேரள கபினி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைவு .ஆனால் கர்நாடக பகுதிகளில் அவ்வளவு குறையவில்லை. எல்லா👍 குளங்கள் மற்றும் ஏரிகளை நிரப்பி விட்டதால் அணைகளுக்கு குறைவாகவே நீர் வந்தது. அதனைக் காரணம் காட்டி தப்பிக்கலாம். நம் மாநில ஏரி குளங்களை நாம் ஆக்கிரமித்தழித்தது அவர்களது தவறல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X