பொது செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' கடை அகற்றம் காஞ்சி கலெக்டர் உறுதி

Added : செப் 13, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சந்தவெளியம்மன் கோவில் அருகேயுள்ள 'டாஸ்மாக்' கடை, 10 நாட்களில் அகற்றப்படும் என, பகுதிவாசிகளுக்கு, கலெக்டர் ஆர்த்தி உறுதியளித்துள்ளார்.காஞ்சிபுரம், சந்தவெளியம்மன் கோவில் அருகே செயல்படும், டாஸ்மாக் கடையால், அங்கு வசிப்பவர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டு வருவதாக, பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வருகிறது.டாஸ்மாக் கடை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சந்தவெளியம்மன் கோவில் அருகேயுள்ள 'டாஸ்மாக்' கடை, 10 நாட்களில் அகற்றப்படும் என, பகுதிவாசிகளுக்கு, கலெக்டர் ஆர்த்தி உறுதியளித்துள்ளார்.

காஞ்சிபுரம், சந்தவெளியம்மன் கோவில் அருகே செயல்படும், டாஸ்மாக் கடையால், அங்கு வசிப்பவர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டு வருவதாக, பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வருகிறது.டாஸ்மாக் கடை அகற்றுவது குறித்து, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அப்பகுதியினர் மனு அளித்திருந்தனர். அதற்கு, 'டாஸ்மாக் கடை அருகில் எந்த வீடுகளும் இல்லை' என, தவறான பதில் அளிக்கப்பட்டது, அங்கிருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதேபோல், டாஸ்மாக் கடையை அகற்றுவதற்காக புகார் அளிப்போருக்கு, கொலை மிரட்டல்களும் தொடர்ந்து வருவதால், போலீசிடம் அப்பகுதியினர் புகார் அளித்து வருகின்றனர்.இந்நிலையில், டாஸ்மாக் கடை அமைந்துள்ள சந்தவெளியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்ய, கலெக்டர் ஆர்த்தி நேரில் சென்றுள்ளார்.அப்போது, அப்பகுதியினர், டாஸ்மாக் கடையை அகற்ற, கலெக்டரிடம் நேரில் புகார் தெரிவித்தனர். அதற்கு, டாஸ்மாக் கடை அகற்று வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 10 நாட்களில் கடை அகற்றப்படும் என, உறுதிபட தெரிவித்துள்ளார். கலெக்டர் உறுதியாக தெரிவித்ததால், அப்பகுதியினர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X