தனியார் பஸ் - சரக்கு வாகனம் மோதல் :அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் பஸ் - சரக்கு வாகனம் மோதல் :அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்

Added : செப் 13, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி - கோவை ரோட்டில், தனியார் பஸ், சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷடவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.கோவையில் இருந்து, தனியார் பஸ், பயணிகளுடன் பொள்ளாச்சி நோக்கி வந்தது. குள்ளக்காபாளையம் பிரிவு அருகே வந்த போது, பொள்ளாச்சியில் இருந்து இரும்பு கம்பி ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு வாகனம், எதிர்திசையில் திரும்பி ரோட்டோரம் சென்றது.அப்போது
 தனியார் பஸ் - சரக்கு வாகனம் மோதல் :அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - கோவை ரோட்டில், தனியார் பஸ், சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷடவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.கோவையில் இருந்து, தனியார் பஸ், பயணிகளுடன் பொள்ளாச்சி நோக்கி வந்தது. குள்ளக்காபாளையம் பிரிவு அருகே வந்த போது, பொள்ளாச்சியில் இருந்து இரும்பு கம்பி ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு வாகனம், எதிர்திசையில் திரும்பி ரோட்டோரம் சென்றது.அப்போது பஸ்சின் பக்கவாட்டு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சின் பக்கவாட்டு பகுதி மற்றும் கண்ணாடி சேதமடைந்தது.அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர். டிரைவர் உள்பட, இரண்டு பேர் லேசான காயமடைந்தனர். இரண்டு வாகனமும் மோதியதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தியதுடன், சம்பவம் குறித்து விசாரித்தனர்.தொடர் விபத்துபொள்ளாச்சி - கோவை ரோட்டின் இருபக்கங்களிலும் கிராமங்கள் உள்ளன. கிராமங்களுக்கு செல்வதற்காக ரோட்டின் நடுவே இடைவெளி விடப்பட்டுள்ளது. இதனால், கிராம சாலையில் இருந்து வரும் வாகனங்கள் கவனிக்காமல் திரும்புவதால், கோவை ரோட்டில் வரும் வாகனங்களில் மோதுகின்றன.மேலும், ஒரு சில வாகனங்கள் விதிமுறை மீறி, ஒருவழிப்பாதையில் வருவதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய, அதிகாரிகள், போலீசார் இணைந்து கண்காணிப்பு பணி மற்றும் அங்கு விபத்துகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X