பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள் - திருவள்ளூர்

Added : செப் 13, 2021
Share
Advertisement
நுாற்றாண்டு கருத்தரங்கம்திருத்தணி: திருத்தணி ஒன்றியம், தாடூர் ஊராட்சியில், கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில், திருவள்ளூர் மாவட்ட குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் கிபாரி தலைமையில் நடந்தது.இதில், மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு கருத்தரங்கமும் நடைபெற்றது. மாநில துணை செயலர் சுந்தரவள்ளி கருத்துரை வழங்கினார். மாவட்ட செயல்பாடுகள் மற்றும் ஒராண்டு வேலை அறிக்கைகளை, மாவட்ட

நுாற்றாண்டு கருத்தரங்கம்

திருத்தணி: திருத்தணி ஒன்றியம், தாடூர் ஊராட்சியில், கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில், திருவள்ளூர் மாவட்ட குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் கிபாரி தலைமையில் நடந்தது.இதில், மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு கருத்தரங்கமும் நடைபெற்றது.

மாநில துணை செயலர் சுந்தரவள்ளி கருத்துரை வழங்கினார். மாவட்ட செயல்பாடுகள் மற்றும் ஒராண்டு வேலை அறிக்கைகளை, மாவட்ட செயலர் அந்தோணி வாசித்தார். அதை தொடர்ந்து, தெருக்கூத்து கலைஞர்கள் கலைப் பண்பாட்டுத் துறையில் பதிவு செய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். மண்டலாபிஷேகம்திருத்தணி: திருத்தணி ஒன்றியம், அலுமேலுமங்காபுரம் கிராமத்தில், சீதா ராம பஜனை கோவிலில், திருப்பணிகள் நடந்து, கடந்த, 9ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் விழா நடந்து வருகிறது.

அந்த வகையில், நேற்று காலை நடந்த மண்டலாபிஷேக விழாவில், ஒரு யாகசாலை அமைத்து, சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் நவகிரச சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.பாலாலயம்ஆர்.கே.பேட்டை: சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்தில் அருள்பாலிக்கும் முத்துமாரியம்மனை, ஆர்.கே.பேட்டை கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆடி மற்றும் தை மாதத்தில், தாயமங்கலம் சென்று அம்மனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் உள்ளூரில் முத்துமாரியம்மன் கோவில் நிர்மானம் செய்ய திட்டமிட்டு வந்தனர்.இதற்கான இடம் தேர்வு செய்வதில், சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தனர். தற்போது, இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணிகளை துவக்க உள்ளனர்.

பாலாலயம் அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி, திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். விரைவில், கட்டுமான பணிகளை துவக்க திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X