பொது செய்தி

தமிழ்நாடு

5,750 கிலோ ரேஷன் அரிசி

Added : செப் 13, 2021
Share
Advertisement
மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே, தனியார் கோழிப் பண்ணையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 5,750 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.மதுராந்தகம் அடுத்த, மாரிப்புத்துார் கிராம பகுதியில் உள்ள தனியார் கோழி பண்ணையில், ரேஷன் அரிசி கடத்தி வைத்திருப்பதாக காஞ்சிபுரம் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு

மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே, தனியார் கோழிப் பண்ணையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 5,750 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுராந்தகம் அடுத்த, மாரிப்புத்துார் கிராம பகுதியில் உள்ள தனியார் கோழி பண்ணையில், ரேஷன் அரிசி கடத்தி வைத்திருப்பதாக காஞ்சிபுரம் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு கூடுதல் இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தரவின்படி, அலுவலர்கள் அக்கோழிப் பண்ணையில் சோதனை நடத்தினர்.இதில், கோழிகளுக்கு தீவனமாக பண்ணையில், 115 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 5,750 கிலோ ரேஷன் அரிசியை குற்ற புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, கோழிப் பண்ணையில் பணியாற்றும் அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன், 46, என்பவரை, போலீசார் கைது செய்தனர். மேலும், கோழிப் பண்ணை உரிமையாளரான சென்னையை சேர்ந்த அப்துல்சமது என்பவரிடம் விசாரணை நடத்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X