படப்பையில் சாலை மறியல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

படப்பையில் சாலை மறியல்

Added : செப் 13, 2021
Share
ஸ்ரீபெரும்புதுார் : காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, குன்னம் ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லுாரி, சுங்குவார்சத்திரம், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, படப்பை ஆல்வின் இன்டர்நேஷனல் பள்ளி.பூந்தண்டலம் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி என, நான்கு மையத்தில் நீட் தேர்வு நடந்தது. இதில், 2,313 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். 83 மாணவர்கள் தேர்வு

ஸ்ரீபெரும்புதுார் : காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, குன்னம் ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லுாரி, சுங்குவார்சத்திரம், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, படப்பை ஆல்வின் இன்டர்நேஷனல் பள்ளி.பூந்தண்டலம் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி என, நான்கு மையத்தில் நீட் தேர்வு நடந்தது.

இதில், 2,313 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். 83 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.படப்பை ஆல்வின் இன்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்கள் போஸ்ட் கார்டு அளவில் புகைப்படம் ஒட்டிய அட்மிட் கார்டை எடுத்து சென்றனர். தேர்வு மையத்தினர். அந்த புகைப்படம் ஒட்டிய படிவம் தேவையில்லை என முதலில் கூறியுள்ளனர்.இதனால், போஸ்ட் கார்டு அளவு புகைப்படம் ஒட்டிய படிவத்தை பெற்றோரிடம் கொடுத்து விட்டு மாணவர்கள் தேர்வு மையத்தின் உள்ளே சென்றனர். அதன்பின், தேர்வு மையத்தினர் போஸ்ட் கார்டு புகைப்படம் தேவை என கூறியுள்ளனர்.அதற்குள் மாணவர்களின் பெற்றோர் பலர் வெளியே சென்றுவிட்டனர்.

இதனால், மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன், போஸ்ட் கார்டு அளவு புகைப்படத்தை, மாலை 5:00 மணி வரை வழங்கலாம் என, தெரிவித்தார்.இதையடுத்து, மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் தேர்வு மையத்தை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பெற்றோர், நேற்று மாலை தேர்வு மையத்தின் வெளியே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X