பொது செய்தி

தமிழ்நாடு

பொதட்டூரில் ஜாத்திரை கொண்டாட்டம் ஆடு, கோழிகளுக்கு திண்டாட்டம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
பொதட்டூர்பேட்டை : பாரம்பரியமாக கொண்டாடப்படும் ஜாத்திரை, பொதட்டூர்பேட்டையில், ஆரட்டம்மன் பொங்கல் வழிபாட்டுடன் நேற்று துவங்கியது. வரும் வெள்ளிக்கிழமை வரை உற்சவம் தொடர்கிறது. நேர்த்திக்கடன் செலுத்துவதை ஒட்டி, இன்று, சிறப்பு ஆட்டு சந்தை நடக்கிறது.பள்ளிப்பட்டு ஒன்றியம், பொதட்டூர்பேட்டை கிராமத்தில், 18 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். பாரம்பரிய திருவிழாக்களில் அம்மன்

பொதட்டூர்பேட்டை : பாரம்பரியமாக கொண்டாடப்படும் ஜாத்திரை, பொதட்டூர்பேட்டையில், ஆரட்டம்மன் பொங்கல் வழிபாட்டுடன் நேற்று துவங்கியது.

வரும் வெள்ளிக்கிழமை வரை உற்சவம் தொடர்கிறது. நேர்த்திக்கடன் செலுத்துவதை ஒட்டி, இன்று, சிறப்பு ஆட்டு சந்தை நடக்கிறது.பள்ளிப்பட்டு ஒன்றியம், பொதட்டூர்பேட்டை கிராமத்தில், 18 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். பாரம்பரிய திருவிழாக்களில் அம்மன் ஜாத்திரை மிகவும் பிரசித்தம்.ஆவணி மாதம், கடைசி வாரத்தில், இந்த திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, ஆரட்டம்மன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது.வரும் வெள்ளிக்கிழமை வரை, தொடர்ந்து உற்சவம் களை கட்டும்.

புதன்கிழமை அன்று, கங்கையம்மனுக்கு கும்பம் படைக்கிறது.கங்கையம்மன் மற்றும் பொன்னியம்மன் உற்சவங்கள் நடைபெற உள்ளன. அம்மனுக்கு நேர்த்திக்கடனாக, ஆடு, கோழிகளை பக்தர்கள் பலி கொடுப்பது வழக்கம்.இதையடுத்து, இன்று, திங்கட்கிழமை சிறப்பு ஆட்டு சந்தை நடைபெறுகிறது. இதில், 5,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், பஸ் நிலையம் அருகே இருந்த புளியந்தோப்பில் ஆட்டு சந்தை நடந்து வந்தது. தற்போது, ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடத்தப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமை பக்தர்களின் ரத உற்சவத்துடன் ஜாத்திரை நிறைவு பெறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X