எழிச்சூரில் 10 நாட்களில் சரிந்தது கால்வாய் தரமற்ற பணியால் விழுந்ததாக குற்றச்சாட்டு

Added : செப் 13, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் : எழிச்சூர் ஏரியில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டு 10 நாட்களில் சரிந்து விழுந்ததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.குன்றத்துார் ஒன்றியம், ஒரகடம் அருகே எழிச்சூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி எழிச்சூரில், 300 ஏக்கர் பரப்பில், ஆண்டுக்கு இரு போகம் விவசாயம் செய்யப்படுகிறது.படப்பை
 எழிச்சூரில் 10 நாட்களில் சரிந்தது கால்வாய் தரமற்ற பணியால் விழுந்ததாக குற்றச்சாட்டு

ஸ்ரீபெரும்புதுார் : எழிச்சூர் ஏரியில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டு 10 நாட்களில் சரிந்து விழுந்ததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குன்றத்துார் ஒன்றியம், ஒரகடம் அருகே எழிச்சூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி எழிச்சூரில், 300 ஏக்கர் பரப்பில், ஆண்டுக்கு இரு போகம் விவசாயம் செய்யப்படுகிறது.படப்பை பொதுப்பணித் துறை சார்பில், இந்த ஏரியின் பெரிய மதகு மற்றும் சின்ன மதகில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் செல்ல, சிமென்ட் கால்வாய் அமைக்கும் பணி, 10 நாட்களுக்கு முன் நடந்தது.இதில், சின்ன மதகில் அமைக்கப்பட்ட கால்வாய், சமீபத்தில் பெய்த கன மழையின் போது சரிந்து விழுந்தது.பொதுப்பணித் துறையினர் கடமைக்காக, தரமற்ற முறையில் கட்டுமான பணியை செய்ததால் தான் கால்வாய் சரிந்து விழுந்தது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.எழிச்சூர் விவசாயி கே.முரளிதரன் கூறியதாவது:எழிச்சூர் ஏரி நீரை பயன்படுத்தி 20 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்கிறேன். கடந்த வாரம் இரவு நேரத்தில், கட்டுமான பணி நடந்தது. இரவில் ஏன் கட்டுமானம் பணி செய்கிறீர்கள் என கேட்டதற்கு, உரிய பதில் இல்லை.மேலும், கட்டுமான கம்பிகள் ஏதுமின்றி, வெறும் ஜல்லிகற்கள், சிமென்ட் கலவையை வைத்து, அவசர அவசரமாக தரமற்ற முறையில் கட்டுமான பணியை செய்துள்ளனர்.

அதனாலேயே சிறிய மழைக்கே கால்வாய் சரிந்து விழுந்தது. உயர் அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.படப்பை பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கால்வாய் கட்டுமானப் பணி முடிந்த பின், ஜே.சி.பி., இயந்திரம் மூலம், கால்வாயின் இருபுறங்களிலும் மண் வைத்து அணைத்தபோது, எதிர்பாரத விதமாக ஜே.சி.பி.,யின் சக்கரம் மோதியதில், கால்வாய் இடிந்து விழுந்து விட்டது.ஒப்பந்ததாரர், சொந்த செலவிலேயே இடிந்த கால்வாயை புதுப்பித்து கட்டித்தர வேண்டும் என 'நோட்டீஸ்' வழங்கியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்பொதுப்பணி துறை சார்பில் குடிமராமத்து பணிகள் மற்றும் இதர கால்வாய் அமைக்கும் பணிகள் அனைத்தும், தரமற்ற முறையில் கட்டப்படுகிறது.ஒப்பந்ததாரர்களிடம் பணியை ஒப்படைத்துவிட்டு, பொதுப்பணி துறை அதிகாரிகள் நேரில் சென்று பணியின் தரத்தை ஆய்வுகூட செய்யாமல் மெத்தனமாக உள்ளனர்.பொதுப்பணி துறை சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த அனைத்து கட்டுமான பணிகளையும், உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X