பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வில் 6,457 பேர் பங்கேற்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
சென்னை : திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் நேற்று நடந்த, 'நீட்' நுழைவு தேர்வில், 6,457 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.திருவள்ளூர் மாவட்டத்தில், கொரட்டூர், அம்பத்துார், முகப்பேர், திருவள்ளூர் உட்பட ஆறு இடங்களில், நீட் தேர்வு நடந்தது. இதில், 2,275 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வில், 67 பேர் தேர்வுக்கு வரவில்லை. மொத்தம், 2,208 பேர்

சென்னை : திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் நேற்று நடந்த, 'நீட்' நுழைவு தேர்வில், 6,457 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், கொரட்டூர், அம்பத்துார், முகப்பேர், திருவள்ளூர் உட்பட ஆறு இடங்களில், நீட் தேர்வு நடந்தது. இதில், 2,275 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வில், 67 பேர் தேர்வுக்கு வரவில்லை. மொத்தம், 2,208 பேர் தேர்வு எழுதினர்.செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'நீட்' நுழைவு தேர்வில், 1,936 மாணவர்கள் பங்கேற்றனர்.பிளஸ் 2 மாணவர்கள், எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, செங்கல்பட்டு மாவட்டத்தில், முதல் முறையாக, 2,001 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.இதில், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மேல்மருவத்துார் ஆகிய இடங்களில், ஆறு மையங்களில், 1,936 மாணவர்கள் தேர்வு எழுதினர். 65 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில், கொரோனா முன்னெச்சரிக்கையாக, முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தனர்.காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு இடங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் 2,313 பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சில மாணவர்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு விண்ணப்பித்து எழுதியுள்ளனர் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X