பொது செய்தி

தமிழ்நாடு

பழவேற்காடு ஏரியை சூழ்ந்துள்ள 'கிரேட்டர் பிளமிங்கோ' பறவை

Added : செப் 13, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி : திருவள்ளூர் மாவட்டத்தில், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பழவேற்காடு ஏரியில், 100 வகை பறவைகள் காணப்படுகின்றன. இந்தியாவில் உள்ள முக்கிய பறவை வாழ்விடங்களில் பழவேற்காடு ஏரியும் ஒன்றாகும்.பல வகையான பறவைகள் இருந்த போதும், 'கிரேட்டர் பிளமிங்கோ' என, ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பெரும் பூநாரை, காண்பவர்களை கவரும் பறவை இனமாகும்.ஆப்ரிக்கா, மத்திய கிழக்கத்திய
 பழவேற்காடு ஏரியை சூழ்ந்துள்ள 'கிரேட்டர் பிளமிங்கோ' பறவை

கும்மிடிப்பூண்டி : திருவள்ளூர் மாவட்டத்தில், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பழவேற்காடு ஏரியில், 100 வகை பறவைகள் காணப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள முக்கிய பறவை வாழ்விடங்களில் பழவேற்காடு ஏரியும் ஒன்றாகும்.பல வகையான பறவைகள் இருந்த போதும், 'கிரேட்டர் பிளமிங்கோ' என, ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பெரும் பூநாரை, காண்பவர்களை கவரும் பறவை இனமாகும்.ஆப்ரிக்கா, மத்திய கிழக்கத்திய நாடுகள், இந்திய துணை கண்டம், தெற்கு ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் இவ்வகை பறவைகள், ஐந்து அடி உயரம் வரை வளரக் கூடியவை.செந்நிறம் கலந்த வெண் நிற உடலும், நீண்ட சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் கொண்டவை.

இப்பறவைகள் கூட்டம், கூட்டமாகப் இடம் பெயர்ந்து தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ப, சதுப்பு நில பகுதிகளில் இரை தேடி செல்வது வழக்கம்.மனித நடமாட்ட பகுதியில் இருந்து, ஒன்றரை கி.மீட்டர் தொலைவில் இரை தேடும் வழக்கம் கொண்டதாகும்.கும்மிடிப்பூண்டி அருகே, சின்னமாங்கோடு மீனவ கிராம படகு துறையில் இருந்து, 100 மீட்டர்தொலைவில் ஆயிரக்கணக்கான கிரேட்டர் பிளமிங்கோ பறவைகள் இரை தேடி பழவேற்காடு ஏரியை சூழந்துள்ளன.ஆழமற்ற நீரில், வரிசையாக நின்று, தலையை நீருக்குள் ஆழ்த்தி இரை தேடும் அழகு, காண்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருப்பதாக அதை காணும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X