பொது செய்தி

தமிழ்நாடு

குடும்ப உறுப்பினர் திட்டம் நுாலக வாசகர்கள் ஆர்வம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
ஷெனாய் நகர் : ஷெனாய் நகரில் உள்ள, வட்டார நுாலகத்தில், சிறுவர் முதல் பெரியோர் வரை, குடும்ப உறுப்பினர் திட்டத்தில் ஆர்வமுடன் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.அனைவருக்கும் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கு வகையில், வட்டார நுாலகங்களில், 'குடும்ப நுாலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஒரே குடும்பத்தில் உள்ள அதிகபட்சம் ஐந்து பேர்
 குடும்ப உறுப்பினர் திட்டம் நுாலக வாசகர்கள் ஆர்வம்

ஷெனாய் நகர் : ஷெனாய் நகரில் உள்ள, வட்டார நுாலகத்தில், சிறுவர் முதல் பெரியோர் வரை, குடும்ப உறுப்பினர் திட்டத்தில் ஆர்வமுடன் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.

அனைவருக்கும் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கு வகையில், வட்டார நுாலகங்களில், 'குடும்ப நுாலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஒரே குடும்பத்தில் உள்ள அதிகபட்சம் ஐந்து பேர் உறுப்பினர்களாக சேர்ந்து, நுால்களை பெற்று செல்லலாம்.இத்திட்டத்தில், சிறுவர்கள் முதல் பெரியோர் வரை, ஏராளாமானோர் பயனடைந்து வருகின்றனர்.

அண்ணாநகர் மண்டலம், ஷெனாய் நகர் வட்டார நுாலகத்தில், இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.இது குறித்து, நுாலகர் கூறியதாவது:குடும்பத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியோர் வரை, அனைவரது வாசிப்பு திறனையும் ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.கொரோனா பரவலால், இத்திட்டம் குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவில்லை. இருப்பினும், இத்திட்டத்தின் கீழ், 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்து பயனடைந்து வருகின்றன.

பலர் குடும்ப உறுப்பினர் திட்டத்தில் பயன்பெற, ஆர்வம் காட்டி வருகின்றனர்.அரசின் வழிகாட்டுதல்படி இயங்கும் இந்நுாலகத்தில், தினமும் 50க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். சிறுவர்களுக்கான நுாலகமும் உள்ளது.கொரோனா தொற்று நடவடிக்கைகள், அரசின் நெறிமுறைகளுடன் கடைப்பிடிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X