பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரியில் காலி இடங்கள் நிரப்ப நடவடிக்கை: நேரடி மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:'பொள்ளாச்சி அரசு கல்லுாரியில், காலியிடங்களுக்கு நேரடியாக சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகிறது,' என கல்லுாரி முதல்வர் தெரிவித்தார்.பொள்ளாச்சி அரசு கலைக்கல்லுாரி முதல்வர் (பொ) ராஜ்குமார் அறிக்கை:பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2021 - 22ம் கல்வியாண்டுக்கான முதலமாண்டு மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில், மீதம் உள்ள

பொள்ளாச்சி:'பொள்ளாச்சி அரசு கல்லுாரியில், காலியிடங்களுக்கு நேரடியாக சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகிறது,' என கல்லுாரி முதல்வர் தெரிவித்தார்.பொள்ளாச்சி அரசு கலைக்கல்லுாரி முதல்வர் (பொ) ராஜ்குமார் அறிக்கை:பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2021 - 22ம் கல்வியாண்டுக்கான முதலமாண்டு மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில், மீதம் உள்ள இடங்களை நிரப்பிட தக்க மாற்று நடவடிக்கை மேற்கொண்டு, நேரடியாக சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள், கல்லுாரி அளவிலேயே அரசு விதிமுறைகளை பின்பற்றி வினியோகிக்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது.அதில், பி.எஸ்.சி., கணிதம் பாடப்பிரிவில் காலியாக உள்ள, 13 இடங்களுக்கும், பி.ஏ., ஆங்கிலம் பாடப்பிரிவுகளில் சில இனச் சுழற்சிகளில் காலியாக உள்ள, நான்கு இடங்களுக்கும் (பி.சி., (முஸ்லிம்) 1, எம்.பி.சி., (வன்னியர்) 1, எம்.பி.சி., 1, எஸ்.டி., 1 ) மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இதுவரை விண்ணப்பிக்காத பி.எஸ்.சி., கணிதம் மற்றும் பி.ஏ., ஆங்கிலம் பாடப்பிரிவில் பயில விருப்பம் உள்ள மாணவ, மாணவியர் புதிய விண்ணப்பங்களை இன்று (13ம் தேதி) முதல், 16ம் தேதி வரை கல்லுாரி அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.மேலும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் வரும், 16ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான கலந்தாய்வு வரும், 20ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியர், 20ம் தேதி அன்றே கல்வி கட்டணத்தை செலுத்தி சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும்.தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர், ஜாதிச்சான்று நகலை சமர்பித்து பதிவு கட்டணமாக, இரண்டு ரூபாய் செலுத்தி விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.பிற இனத்தை சேர்ந்த மாணவ, மாணவியர், 50 ரூபாய் செலுத்தி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். பள்ளி மாற்றுச்சான்றிதழ், பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்கள், ஜாதிச்சான்றிதழ் நகல் ஒன்றும்; பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஒன்றும் இணைத்து வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X