பொது செய்தி

தமிழ்நாடு

உடுமலை மையத்தில் 'நீட்' தேர்வு: 460 மாணவர்கள் பங்கேற்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
உடுமலை:மருத்துவ படிப்புகளில், சேர்வதற்கான நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், உடுமலை மையத்தில், 460 மாணவ, மாணவியர் எழுதினர்.மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, நேற்று நடந்தது.திருப்பூர் மாவட்டத்தில், 3,909 பேர், தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், எட்டு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.அவ்வகையில்,
 உடுமலை மையத்தில் 'நீட்' தேர்வு: 460 மாணவர்கள் பங்கேற்பு

உடுமலை:மருத்துவ படிப்புகளில், சேர்வதற்கான நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், உடுமலை மையத்தில், 460 மாணவ, மாணவியர் எழுதினர்.மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, நேற்று நடந்தது.திருப்பூர் மாவட்டத்தில், 3,909 பேர், தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், எட்டு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.அவ்வகையில், உடுமலை ஜி.வி.ஜி., மகளிர் கல்லுாரியில், 480 மாணவ, மாணவியர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுத வந்த மாணவர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.குறிப்பாக, தேர்வு எழுதும் மாணவர்கள், அனைவரும் காலை, 11:00 மணிக்கு, தேர்வு மையத்திற்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.ஒவ்வொரு அறையிலும், மாணவர்கள் சரியான இடைவெளியில் அமரவைக்கப்பட்டனர். அதேபோல், அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து தேர்வு எழுதினர். பாதுகாப்பு கருதி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.நீட் தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகையில்,''உடுமலையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், 460 பேர் தேர்வு எழுதினர். 20 பேர் ஆப்சென்ட் ஆகியிருந்தனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X