தமிழ்நாடு

வடிகால் மேல்மூடியால் அபாயம் அதிகாரிகள் விழித்து கொள்வரா?

Added : செப் 13, 2021
Share
Advertisement
வளசரவாக்கம் : வளசரவாக்கம் மண்டலத்தில், வடிகால் 'மேன் ஹோல்' சீரமைப்பில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாக உள்ளனர். உயிர் பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், அதிகாரிகள் விழித்து கொள்ள வேண்டும் என, பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்தின் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால் 'மேன் ஹோல்' மூடிகள் உடைத்துள்ளன. இதனால், பாதசாரிகள் மற்றும்
 வடிகால் மேல்மூடியால் அபாயம் அதிகாரிகள் விழித்து கொள்வரா?

வளசரவாக்கம் : வளசரவாக்கம் மண்டலத்தில், வடிகால் 'மேன் ஹோல்' சீரமைப்பில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாக உள்ளனர்.

உயிர் பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், அதிகாரிகள் விழித்து கொள்ள வேண்டும் என, பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்தின் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால் 'மேன் ஹோல்' மூடிகள் உடைத்துள்ளன. இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இதில், வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தையொட்டி உள்ள 'அம்மா உணவகம்' அருகே வடிகால் 'மேன் ஹோல்' மற்றும் காமகோடி நகர் முதல் பிரதான சாலையில் உள்ள வடிகால் 'மேன் ஹோல்' மேல் மூடிகளின்றி இருந்தன. இது குறித்து, நம் நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியானது.இதையடுத்து, அம்மா உணவகம் அருகே உள்ள மேல் மூடி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. ஆனால், காமகோடி நகர் பிரதான சாலையில் உள்ள வடிகால் மேல் மூடி இன்னும் சீரமைக்கப்படவில்லை.

இது குறித்து உதவி செயற்பொறியாளரிடம் கேட்டபோது, 'அந்த மேல் மூடியை சீரமைக்க ஒப்பந்ததாரரிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் பார்த்துக் கொள்வர்' என, விபரீதத்தை உணராமல் அலட்சியமாக பதில் அளித்தார்.விபத்து உயிர் பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், அதிகாரிகள் விழித்து கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X