பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய லோக்அதாலத்; ரூ.3.73 கோடி இழப்பீடு: 975 வழக்குகளில் 371க்கு தீர்வு

Added : செப் 13, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறையில் நடந்த, லோக்அதாலத் விசாரணையில், 371 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, 3 கோடியே, 72 லட்சத்து, 94 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவானது.பொள்ளாச்சி சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சப் - கோர்ட், மாஜிஸ்திரேட் கோர்ட் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் கோர்ட்களில், தேசிய லோக்அதாலத் விசாரணை மன்றங்கள் அமைக்கப்பட்டன.மூன்று லோக்அதாலத் விசாரணை
 தேசிய லோக்அதாலத்; ரூ.3.73 கோடி இழப்பீடு: 975 வழக்குகளில் 371க்கு தீர்வு

பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறையில் நடந்த, லோக்அதாலத் விசாரணையில், 371 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, 3 கோடியே, 72 லட்சத்து, 94 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவானது.பொள்ளாச்சி சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சப் - கோர்ட், மாஜிஸ்திரேட் கோர்ட் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் கோர்ட்களில், தேசிய லோக்அதாலத் விசாரணை மன்றங்கள் அமைக்கப்பட்டன.

மூன்று லோக்அதாலத் விசாரணை மன்றங்களுக்கு, சார்பு நீதிபதி பாலமுருகன், கூடுதல் மாவட்ட உரிமையியல் கோர்ட் நீதிபதி சுபாஷினி, மாஜிஸ்திரேட் செல்லையா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.விசாரணையில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கேட்பில், 25 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 19க்கு தீர்வு காணப்பட்டு, இழப்பீடாக, 86 லட்சத்து, 45 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவானது.செக்மோசடி தொடர்பாாக, 37 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 10க்கு தீர்வு காணப்பட்டது. இதன்வாயிலாக, 25 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, 74 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, இரண்டு லட்சத்து, 72 ஆயிரத்து, 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

நிறைவேற்று மனுக்கள், இரண்டுக்கு தீர்வு காணப்பட்டு, 3 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. சட்டவிரோதமாக மது விற்றதாக, 40 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 36 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்க உத்தரவானது. ஒப்பந்த மீறல் தொடர்பாக, ஏழு வழக்குகள் விசாரிக்கப்பட்டு, ஒன்றுக்கு மட்டும் தீர்வு காணப்பட்டு, 7.75 லட்சம் ரூபாய் வசூலிக்க உடன்பாடு எட்டப்பட்டது.மொத்ததில், பொள்ளாச்சியில் நடந்த தேசிய லோக்அதாலத்தில், 662 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 200 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, இழப்பீடாக ஒரு கோடியே, 27 லட்சத்து இரண்டாயிரம் ரூபாய் வழங்க உத்தரவானது.வால்பாறைவால்பாறை கோர்ட்டில், மாஜிஸ்திரேட் கவிதா தலைமையில், லோக்அதாலத் நடந்தது. சிவில் வழக்குகள், செக் மோசடி வழக்குகள் உட்பட, 51 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் 41 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 9 லட்சத்து, 38 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.உடுமலைஉடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், லோக்அதாலத் நடந்தது. உடுமலை சப்-கோர்ட் வளாகத்தில், நீதிபதி மணிகண்டன் தலைமையிலும், இரண்டவது அமர்வு, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில், நீதிபதி பாக்யராஜ் தலைமையிலும் நடந்தது.இதில், 82 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரணைக்கப்பட்டு, 42 வழக்குகளுக்கு, 2 கோடியே, 12 லட்சத்து, 7 ஆயிரம் ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

62 சிறு, குறு சமரசத்திற்குரிய வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 42க்கு தீர்வு காணப்பட்டு, 78 ஆயிரத்து, 200 ரூபாய், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.வங்கி வாராக்கடன் வழக்குகள், 40 எடுக்கப்பட்டு, 9 லட்சம் ரூபாய் மதிப்பில், 7 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. செக் மோசடி வழக்குகள், 8 எடுக்கப்பட்டு, 3 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

சிவில் வழக்குகள், 61 எடுக்கப்பட்டு, 32 வழக்குகளில், 9.43 லட்சம் ரூபாய் தீர்வு காணப்பட்டது. மொத்தம், 262 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 130 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 2 கோடியே, 36 லட்சத்து, 54 ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டு, வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன- நிருபர் குழு -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X