அறுவடை முடிந்த வயல் போல காட்சியளிக்கும் நெற்குன்றம் சாலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறுவடை முடிந்த வயல் போல காட்சியளிக்கும் நெற்குன்றம் சாலை

Added : செப் 13, 2021
Share
நெற்குன்றம் : நெற்குன்றத்தில் குடிநீர் வாரிய பணிகளால், அறுவடை முடிந்த வயல்வெளி போல சாலை காட்சியளிக்கிறது.வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம், 145வது வார்டு மாதா கோவில் தெருவில், குடிநீர் வாரியம் சார்பில் பாதாளச் சாக்கடை பணிகள் நடந்தன.இதற்காக, சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டு, குழாய் பதிக்கும் பணிகள் நடந்தன. பின், மண் கொட்டி மூடப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையில், சாலை சேறும்

நெற்குன்றம் : நெற்குன்றத்தில் குடிநீர் வாரிய பணிகளால், அறுவடை முடிந்த வயல்வெளி போல சாலை காட்சியளிக்கிறது.

வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம், 145வது வார்டு மாதா கோவில் தெருவில், குடிநீர் வாரியம் சார்பில் பாதாளச் சாக்கடை பணிகள் நடந்தன.இதற்காக, சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டு, குழாய் பதிக்கும் பணிகள் நடந்தன. பின், மண் கொட்டி மூடப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையில், சாலை சேறும் சகதியுமாக மாறியது.தற்போது, சாலை மட்டத்தில் இருந்து, 1 அடி உயரத்திற்கு மேல் மண் தேங்கி உள்ளது. இதனால் பார்ப்பதற்கு அறுவடை முடிந்த வயல்வெளி போல காட்சியளிக்கிறது.இதனால், இருசக்கர மற்றும் இலகுரக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். விபத்து ஏற்படும் முன், சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X