சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நூலக முன்புற மேற்கூரை இடிந்தது: வாசகர்கள் அச்சம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா, காரத்தொழுவு ஊர்ப்புற நுாலகம், கடந்த 2005ம் ஆண்டு வாடகை கட்டடத்தில் தொடங்கப்பட்டு, 2006ல் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டது. தற்போது வரை இந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.இங்கு, 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்தக்கட்டடம் உறுதி இல்லாத காரணத்தால், பல ஆண்டுகளுக்கு முன்பே, பல இடங்களில் பழுதடைந்து சுவற்றில் விரிசல் ஏற்படும் நிலை
 நூலக முன்புற மேற்கூரை இடிந்தது: வாசகர்கள் அச்சம்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா, காரத்தொழுவு ஊர்ப்புற நுாலகம், கடந்த 2005ம் ஆண்டு வாடகை கட்டடத்தில் தொடங்கப்பட்டு, 2006ல் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டது. தற்போது வரை இந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.இங்கு, 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்தக்கட்டடம் உறுதி இல்லாத காரணத்தால், பல ஆண்டுகளுக்கு முன்பே, பல இடங்களில் பழுதடைந்து சுவற்றில் விரிசல் ஏற்படும் நிலை இருந்தது.இதனால் வாசகர்கள் அச்சம் தெரிவித்ததோடு, இக்கட்டடத்தை பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை பராமரிக்கப்படவில்லை.இந்நிலையில், நேற்று காலை ஒரு வாசகர் உள்ளே நுழையும் பொழுது, கதவுக்கு மேல் இருந்த மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில், அவரின் தலை, கை கால்களில் காயம் ஏற்பட்டது.வாசகர்கள், பொதுமக்கள் கூறியதாவது: பொதுமக்கள் பங்களிப்பில், 2003ம் ஆண்டு இந்த நுாலகம் தொடங்கப்பட்டது. அதற்குப்பின்பு, நுாலகத்துறை வாயிலாக இந்த கட்டடம் கட்டப்பட்டது. இன்றுவரை முறையான பராமரிப்பு இல்லை.இதனால், இந்த கட்டடம் மிகவும் சேதமடைந்துள்ளது. உள்ளே சென்று படிக்கவும், புத்தகம் எடுத்து வரவும் அச்சமாக உள்ளது.இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு, இந்த கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்வதோடு, பராமரித்து புதுப்பிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X