பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் வடிகாலில் ஆறாக பாயும் கழிவு நீர் விழி பிதுங்கிய மாநகராட்சி அதிகாரிகள்

Added : செப் 13, 2021
Share
Advertisement
மயிலாப்பூர் : மயிலாப்பூர், பி.எஸ்.சிவசாமி சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட மயிலாப்பூர், பி.எஸ்.சிவசாமி சாலையில், 7ம் தேதி காலை விவேகானந்தர் கல்லுாரி அருகே 20 அடி நீளத்திற்கு திடீர் பள்ளம் விழுந்தது.சட்டவிரோத இணைப்புமாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில், மிக பழமையான மழை நீர் வடிகாலில்

மயிலாப்பூர் : மயிலாப்பூர், பி.எஸ்.சிவசாமி சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட மயிலாப்பூர், பி.எஸ்.சிவசாமி சாலையில், 7ம் தேதி காலை விவேகானந்தர் கல்லுாரி அருகே 20 அடி நீளத்திற்கு திடீர் பள்ளம் விழுந்தது.சட்டவிரோத இணைப்புமாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில், மிக பழமையான மழை நீர் வடிகாலில் கசிவு ஏற்பட்டு, மண் அரிப்பு ஏற்பட்டதே பள்ளத்திற்கான காரணம் என தெரிய வந்தது.மேலும், மழை நீர் வடிகாலில் சட்டவிரோதமாக கழிவு நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால், கழிவு நீர் ஆறாக ஓடுகிறது.அவற்றை தடுப்பதற்காக மண் மூட்டைகள் அமைத்தும், பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால், என்ன செய்வது என தெரியாமல், மாநகராட்சி அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இது குறித்து அப்பகுதிமக்கள் கூறியதாவது:மத்திய வட்டார துணை கமிஷனராக, அருள் சுந்தர் தயாளன் பணியாற்றிய போது, மழை நீர் வடிகாலில் சட்டவிரோத இணைப்பு உள்ளதை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார்.தொடர்கதைஅதன்பின் வந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாத காரணத்தால், சென்னையில் பெரும்பாலான மழைநீர் வடிகால்கள், கழிவு நீர் கால்வாயாக தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது, பி.எஸ்.சிவசாமி சாலையில் உள்ள மழை நீர் வடிகாலில் கொடுக்கப்பட்டுள்ள சட்டவிரோத கழிவு நீர் இணைப்புகளை துண்டிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையேல், இது தொடர்கதையாக மாறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X