விளம்பரத்தில் கோல்கட்டா மேம்பாலம்; சர்ச்சையில் சிக்கிய யோகி ஆதித்யநாத்

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி-உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சாதனைகளை விளக்கும் பத்திரிகை விளம்பரத்தில், கோல்கட்டாவில் உள்ள மேம்பாலத்தின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இந்நிலையில், உ.பி., யின்

புதுடில்லி-உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சாதனைகளை விளக்கும் பத்திரிகை விளம்பரத்தில், கோல்கட்டாவில் உள்ள மேம்பாலத்தின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.



latest tamil news



உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இந்நிலையில், உ.பி., யின் வளர்ச்சியை விளக்கும் விதமாக நாளிதழ்களில் முழு பக்க விளம்பரத்தை யோகி ஆதித்யநாத் அரசு நேற்று வெளியிட்டது. விமர்சனம்அதில், யோகி ஆதித்யநாத் படத்துடன் சில தொழிற்சாலைகள், வானுயர்ந்த கட்டடங்கள், பிரமாண்ட மேம்பால புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

'ஆதித்யநாத் தலைமையில் மாறும் உத்தர பிரதேசம்' என்ற வாசகமும் அதில் இடம் பெற்றுள்ளது.அந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ள மேம்பால புகைப்படம், மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள 'மா' மேம்பாலம் என்பது தெரிய வந்துள்ளது.

மேம்பாலத்தில் பூசப்பட்டுள்ள நீலம், வெள்ளை நிறம், கோல்கட்டாவில் மட்டுமே இயங்கும் மஞ்சள் நிற டாக்சியும், அந்த படத்தில் தெளிவாக தெரிகின்றன.மேலும், அந்த விளம்பரத்தில் உள்ள பிரமாண்ட கட்டடங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சொந்தமானவை என்பதும் தெரிய வந்துள்ளது.'மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கட்டிய மேம்பாலத்தின் புகைப்படத்தை போட்டு, அதில் பெருமை தேடி கொள்ள யோகி ஆதித்யநாத் முயற்சிக்கிறார்' என, பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.


latest tamil news



மன்னிப்பு

இது குறித்து, திரிணமுல் காங்., எம்.பி., அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:மம்தா தலைமையில் கோல்கட்டாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பணிகளின் புகைப்படங்களை திருடி அதை, தான் செய்ததாக விளம்பரம் செய்து கொள்வதே உ.பி.,யில் ஏற்பட்டுள்ள மாற்றம். பா.ஜ.,வின் இரட்டை 'இன்ஜின்' ஆட்சி உ.பி.,யில் தோல்வியை தழுவியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த விளம்பரத்தை வடிவமைத்த, ஆங்கில நாளிதழ், தன் தவறை ஒப்புக்கொண்டு சமூக வலைதளத்தில் மன்னிப்பு கோரி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
13-செப்-202114:41:59 IST Report Abuse
Milirvan நாளிதழ்களில் விளம்பரம் செய்யும்போது பிஜேபியினர் விழிப்புடன் இருக்க வேண்டும்.. இதன் பின் யார் என்பதை கண்டுகொண்டு கவனித்து விடவேண்டும்.. இந்த விலைபோகும் கழிசடைகளை கொண்டு ஒரு சீன் போட சிக்குளர்கள் காத்து கிடப்பார்கள்.. இவ்வளவு வெளிப்படையாக விமர்சனங்களை தூண்டும் வகையில் எந்த அரசியல் கட்சியும் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளாது கான் கிராஸ் தவிர.. ஹி..ஹி..
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
13-செப்-202114:03:29 IST Report Abuse
pradeesh parthasarathy இவர்கள் ஆட்சியில் எதை உருவாக்கினார்கள் ..... முன்னவர்கள் ஆட்சியில் உருவாக்கியதை இவர்கள் விற்க அல்லவா செய்கிறார்கள் ....
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
13-செப்-202113:41:03 IST Report Abuse
ஜெயந்தன் யோ (க்)கி.....யதை ... தெரிஞ்சதுதானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X