சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : செப் 13, 2021
Share
Advertisement
'அப்படி எந்த நாட்டில் இருக்கிறது; நீங்கள் கவர்னராக இருந்த போது அதை ஏன் செய்யவில்லை; பதில் சொல்லுங்கள்...' என, மடக்கத் தோன்றும் வகையில், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்ரகுராம் ராஜன் அறிக்கை: எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத தனியார்மயம், மக்களிடம் இருந்து பணத்தை பிழிந்து எடுத்து விடும். சிறந்த நிர்வாகமும், மேம்பட்ட விதிகளும் இருந்தால் தனியார்மயத்தை விட பல மடங்கு நன்மை
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'அப்படி எந்த நாட்டில் இருக்கிறது; நீங்கள் கவர்னராக இருந்த போது அதை ஏன் செய்யவில்லை; பதில் சொல்லுங்கள்...' என, மடக்கத் தோன்றும் வகையில், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்ரகுராம் ராஜன் அறிக்கை: எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத தனியார்மயம், மக்களிடம் இருந்து பணத்தை பிழிந்து எடுத்து விடும். சிறந்த நிர்வாகமும், மேம்பட்ட விதிகளும் இருந்தால் தனியார்மயத்தை விட பல மடங்கு நன்மை கிடைக்கும்.
'அது சரி. தமிழகத்தில், 'நீட்' தேர்வை நடத்த விட மாட்டோம் என்றனரே... அதை மறந்து விட்டனரா...' என, போட்டுக் கொடுக்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'நீட்' தேர்வு எழுதும் மாணவர்களிடம் மென்மையான போக்கு கடைப்பிடிக்கப்படும் என்கிறார், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர். நீட் தேர்வு, தி.மு.க.,வுக்கு பிடிக்கவில்லை என்றால் மாணவர்களிடம் கடினமாக நடந்து கொள்ளுமா... இதெல்லாம் பொறுப்பற்ற பேச்சு.
'இதெல்லாம் ஒரு புகாரா... எம்.பி.,க்கள் நினைத்தால் தான், அடுத்த விமானத்தை பிடித்து, இரண்டு மணி நேரத்தில் எங்கும் சென்று விட முடியுமே...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், விருதுநகர் தொகுதி காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் அறிக்கை: நான் தற்போது டில்லியில் இருக்கிறேன். நேற்று மதியம் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் மத்திய அமைச்சர்கள் முருகன் மற்றும் நிர்மலா சீதாராமனை மதுரையில் சந்திக்க நேரம் குறிப்பிட்டிருந்தது. உள்ளூர் எம்.பி.,க்களுக்கு கூட, 2 - 3 நாட்களுக்கு முன் தகவல் தெரிவிக்க மாட்டேன் என்கின்றனர் என்பது ஆச்சர்யமாக உள்ளது.
'எல்.ஐ.சி.,யை விட பல ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கப்பட்டது காங்கிரஸ் கட்சி. இந்த நாட்டுக்கு என்ன கொடுத்துள்ளது...' என, எடக்கு மடக்காக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா அறிக்கை: கடந்த ஆண்டில் மத்திய அரசுக்கு ஈவுத் தொகையாக வழங்கியது 2,698 கோடி ரூபாய். மக்கள் வரிப் பணத்தில், மக்கள் நலனுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட மக்களின் சொத்து தான் எல்.ஐ.சி., இதை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க முயலும் மோடி அரசின் முயற்சிகளை முறியடிப்போம். மக்கள் சொத்தை பாதுகாப்போம்.

'அப்பாடா... நிம்மதி. அதற்காக அசந்து இருந்து விடாதீர்கள். முதலில் கொரோனாவை விரட்ட பாருங்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பேட்டி: கேரளாவில், 'நிபா' வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நடத்தப்பட்ட அனைத்து சோதனைகளும் நெகட்டிவ் ஆக வந்துள்ளது நிம்மதி அளிக்கிறது. எனினும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகளை முடுக்கி விடுவோம்.

'உங்கள் சொல், சென்னை அறிவாலயம் தாண்டி கேட்காது. எனவே, ராஜ்பவனுக்கோ அல்லது டில்லிக்கோ நிச்சயம் கேட்கப் போவதில்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவியை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். ஜனநாயகப்பூர்வமாக செயல்படும் ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X