சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டவரில் ஏறிய நபரால் பரபரப்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, மொபைல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி கிருஷ்ணசாமி பிள்ளை காலனியில் உள்ள மொபைல்போன் டவரில், நேற்று ஒருவர் ஏறி நின்று போராட்டம் நடத்தினார்.தகவல் அறிந்த கிழக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். சமரசம் பேசி அந்த நபரை கீழே இறங்க
 டவரில் ஏறிய நபரால் பரபரப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, மொபைல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி கிருஷ்ணசாமி பிள்ளை காலனியில் உள்ள மொபைல்போன் டவரில், நேற்று ஒருவர் ஏறி நின்று போராட்டம் நடத்தினார்.தகவல் அறிந்த கிழக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். சமரசம் பேசி அந்த நபரை கீழே இறங்க வைத்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் கூறுகையில், 'சூளேஸ்வரன்பட்டி அழகப்பா காலனியை சேர்ந்த பெயின்டர் நாகராஜ்,54, அவரது அம்மாவுடன் வசித்து வந்தார். சமீபத்தில் அவரது அம்மா இறந்தார். இதனையடுத்து, ஒருவரிடம் கொடுத்த பணத்தை பெற்றுதர வேண்டும் என வலியுறுத்தி மொபைல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X