பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் கோட்டத்தில் 10 பேருக்கு தொற்று

Added : செப் 13, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மரப்பேட்டை வீதி, கோட்டூர் ரோடு காமராஜ் நகர் பகுதியில் மொத்தம், இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆச்சிப்பட்டியில் ஒருவருக்கு கொரோனா

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மரப்பேட்டை வீதி, கோட்டூர் ரோடு காமராஜ் நகர் பகுதியில் மொத்தம், இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆச்சிப்பட்டியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பொள்ளாச்சி தாலுகாவில் மொத்தம், மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கிணத்துக்கடவு தாலுகாவில், நேற்று, செங்குட்டுபாளையத்தை சேர்ந்த, 85 வயது முதியவருக்கு தொற்று உறுதியானது. இவரது குடும்பத்தை சேர்ந்த, இருவருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.ஆனைமலை தாலுகாவில், நேற்று, ஆனைமலை, காளியப்பகவுண்டன்புதுார், கோட்டூர், திவான்சாபுதுார் பகுதிகளில், ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், பள்ளி மாணவர்கள் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. வால்பாறையில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை.வருவாய் கோட்டத்தில், நேற்று, 10 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதித்தோருடன் தங்கியிருந்தவர்கள் தனிமைபடுத்தி, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X