தி.மு.க., சார்பில் சைக்கிள் போட்டி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., சார்பில் சைக்கிள் போட்டி

Added : செப் 13, 2021
Share
பொள்ளாச்சி:கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., மற்றும் பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 112வது பிறந்தாள் விழாவையொட்டி சைக்கிள் ஓட்டும் போட்டி நடந்தது.கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர் வடுகை பழனிசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் இருந்து, சைக்கிள்

பொள்ளாச்சி:கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., மற்றும் பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 112வது பிறந்தாள் விழாவையொட்டி சைக்கிள் ஓட்டும் போட்டி நடந்தது.கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர் வடுகை பழனிசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் இருந்து, சைக்கிள் ஓட்டம் துவங்கி, நடுப்புணி வரை சென்றனர். அதன்பின், அங்கு இருந்து பொள்ளாச்சிக்கு வந்தனர். போட்டியில், 146 பேர் பங்கேற்றனர். அதில், முதலாவதாக வந்த சிறுவனுக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X