டில்லி எல்லையில் விவசாயிகள் வெள்ளத்தில் அமர்ந்து போராட்டம்

Added : செப் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி-டில்லி - உத்தர பிரதேச எல்லையில் தேங்கியுள்ள வெள்ளத்தில் அமர்ந்து, பாரதிய கிஷான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தலைநகர் டில்லி மற்றும் உத்தர பிரதேச மாநில எல்லை பகுதிகளில் சமீப நாட்களாக கன மழை பெய்து வருகிறது. டில்லியில் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் வெள்ளம்
 டில்லி எல்லையில் விவசாயிகள் வெள்ளத்தில் அமர்ந்து போராட்டம்

புதுடில்லி-டில்லி - உத்தர பிரதேச எல்லையில் தேங்கியுள்ள வெள்ளத்தில் அமர்ந்து, பாரதிய கிஷான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தலைநகர் டில்லி மற்றும் உத்தர பிரதேச மாநில எல்லை பகுதிகளில் சமீப நாட்களாக கன மழை பெய்து வருகிறது. டில்லியில் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அதேபோல் சாலை போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, டில்லி எல்லையில் உள்ள காஜிப்பூரில் 2020ம் ஆண்டு நவ., முதல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பெய்யும் கன மழை காரணமாக போராட்ட பந்தல் மற்றும் மேடை வெள்ளத்தில் மூழ்கின. இதையடுத்து, பாரதிய கிஷான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தலைமையில், டில்லி - உத்தர பிரதேச எல்லையான காஜிப்பூர் சாலையில் தேங்கியுள்ள வெள்ளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
13-செப்-202115:38:08 IST Report Abuse
R.RAMACHANDRAN நெருப்பில் அமர்ந்து உயிர் விடும் நிலை இருந்தாலும் இந்த நாட்டில் கண்டு கொள்ள மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X