பொது செய்தி

தமிழ்நாடு

முதல் டோஸ் தடுப்பூசி 98 சதவீதம் நிறைவு

Added : செப் 13, 2021
Share
Advertisement
குன்னுார்:நீலகிரியில், 13 ஆயிரம் பேருக்கு இலக்கு நிர்ணயித்து, பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.குன்னுார் எடப்பள்ளியில் நடந்த முகாமை, துவக்கி வைத்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:நீலகிரியில், 295 மையங்களில், 1,180 கள பணியாளர்கள் மூலம், 13 ஆயிரம் பேருக்கு இலக்கு நிர்ணயித்து தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில், 7 லட்சத்து 23 ஆயிரத்து 396

குன்னுார்:நீலகிரியில், 13 ஆயிரம் பேருக்கு இலக்கு நிர்ணயித்து, பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.குன்னுார் எடப்பள்ளியில் நடந்த முகாமை, துவக்கி வைத்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:நீலகிரியில், 295 மையங்களில், 1,180 கள பணியாளர்கள் மூலம், 13 ஆயிரம் பேருக்கு இலக்கு நிர்ணயித்து தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில், 7 லட்சத்து 23 ஆயிரத்து 396 மக்கள் தொகையில், 5 லட்சத்து 17 ஆயிரத்து 576 பேர், 18 வயதிற்கு மேற்பட்டோர்; இதில், இதுவரை 5 லட்சத்து 9 ஆயிரத்து 622 பேர் முதல் தவணை தடுப்பூசியிட்டதால், 98 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. 1 லட்சத்து 49 ஆயிரத்து 713 பேர், 2ம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.மாற்றுத்திறனாளி, முதியோரின் வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தவும், பழங்குடியின மக்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடனும், 20 நடமாடும் மையங்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.தோட்ட தொழிலாளர்களுக்கு, 9 குழுக்கள், டான் டீ தொழிலாளர்களுக்கு 4 குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு நல்க வேண்டும்.இவ்வாறு ராமச்சந்திரன் பேசினார்.கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரான தலைமை செயல் அலுவலர் சங்கர், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தனர்.முகாமில், கூடுதல் கலெக்டர் (பொ) மோனிகா ராணா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X