பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் நீதிமன்றம் 27 வழக்குகளுக்கு தீர்வு

Added : செப் 13, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுார் கோர்ட்டில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மக்கள் நீதிமன்றம் நடந்தது. சார்பு நீதிபதி வெங்கடசுப்ரமணியம் தலைமை வகித்தார். மாஜிஸ்திரேட் பாபு முன்னிலை வகித்தார்.இதில், 200 வழக்குகள் தீர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதில், வங்கி கடன், செக் மோசடி உள்ளிட்ட, 27 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.அதில், கணவரை இழந்த கூடலுாரை சேர்ந்த ரீனா என்ற பெண்,

கூடலுார்:கூடலுார் கோர்ட்டில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மக்கள் நீதிமன்றம் நடந்தது. சார்பு நீதிபதி வெங்கடசுப்ரமணியம் தலைமை வகித்தார். மாஜிஸ்திரேட் பாபு முன்னிலை வகித்தார்.இதில், 200 வழக்குகள் தீர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதில், வங்கி கடன், செக் மோசடி உள்ளிட்ட, 27 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.அதில், கணவரை இழந்த கூடலுாரை சேர்ந்த ரீனா என்ற பெண், வங்கியில் பெற்ற, 50 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்படுவது தெரியவந்தது.'வங்கி சார்பில், 20 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதும்,' என, தெரிவிக்கப்பட்டது.அவரால், அந்த தொகையையும் செலுத்த முடியாத நிலை இருந்தது. அதனை அறிந்த சார்பு நீதிபதி வெங்கடசுப்ரமணியம், வக்கீல்கள் அப்சல்ஜா, பிலிப் ஆகியோர், கடன் தொகையை வங்கிக்கு செலுத்தினர். அந்த ஏழை பெண், அவர்களுக்கு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X