பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி தேர்தல் வேண்டாம் மூவரசம்பட்டு நலச்சங்கத்தினர் வேண்டுகோள்

Added : செப் 13, 2021
Share
Advertisement
சென்னை : 'தாம்பரம் மாநகராட்சி உருவான பின், வார்டு கவுன்சிலருக்கான தேர்தல் நடத்தினால் போதும், ஊராட்சி தேர்தல் நடத்தி மக்கள் வரி பணத்தை வீணடிக்க வேண்டாம்' என, மூவரசம்பட்டு பகுதியை சேர்ந்த நலச்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சென்னை, மடிப்பாக்கம் அடுத்துள்ளது மூவரசம்பட்டு ஊாரட்சி. இங்கு, 20க்கும் மேற்பட்ட நகர்களும், 100க்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன; 40

சென்னை : 'தாம்பரம் மாநகராட்சி உருவான பின், வார்டு கவுன்சிலருக்கான தேர்தல் நடத்தினால் போதும், ஊராட்சி தேர்தல் நடத்தி மக்கள் வரி பணத்தை வீணடிக்க வேண்டாம்' என, மூவரசம்பட்டு பகுதியை சேர்ந்த நலச்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை, மடிப்பாக்கம் அடுத்துள்ளது மூவரசம்பட்டு ஊாரட்சி. இங்கு, 20க்கும் மேற்பட்ட நகர்களும், 100க்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன; 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பெருங்குடி மண்டலம்மூவரசம்பட்டு ஊராட்சியில் முறையான குடிநீர், தரமான சாலைகள், பாதாள சாக்கடை வசதி என எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வூராட்சியில் இருந்த மிகப் பெரிய ஏரியில், குப்பை கொட்டி மூடப்பட்டு வந்தது. நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் பல ஆண்டு கால போராட்டத்திற்கு பின் ஏரி மீட்கப்பட்டது.மக்களின் எந்தவொரு தேவையாக இருந்தாலும், போராடி பெற வேண்டிய சூழல் ஏற்பட்டதால் ஊராட்சி நிர்வாகத்தின் மீது வெறுப்பில் இருந்தனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், மூவரசம்பட்டு அருகில் இருந்த மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள் இணைத்து, பெருங்குடி மண்டலம் உருவாக்கப்பட்டது.அப்போதே, மூவரசம்பட்டு உள்ளிட்ட ஏழு ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்காக பத்து ஆண்டுகளாக நலச்சங்கத்தினர் போராடி வந்தனர்.இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதால், மூவரசம்பட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நேற்று வெளியான மாநகராட்சி குறித்த அரசாணையில் மூவரசம்பட்டு பகுதி இடம்பெறவில்லை.

இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம், விடுபட்ட மாவட்டங்களில், உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதில், காஞ்சிபுரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்திலும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.அதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படாமல் ஊராட்சி தேர்தல் நடந்தால் தங்கள் பகுதிக்கு போதிய அடிப்படை வசதிகள் கிடைக்காது என மூவரசம்பட்டு மக்கள் அச்சப்படுகின்றனர்.பலன் இல்லைஇந்த சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால், ஓட்டளிக்காமல் எதிர்ப்பை தெரிவிப்பது என முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, ஊராட்சி தேர்தல் நடத்தி, மக்கள் வரிப் பணத்தை வீணடிப்பதற்கு பதில், தாம்பரம் மாநகராட்சி பணியை விரைந்து முடித்து, அதனுடன் மூவரசம்பட்டு ஊராட்சியையும் இணைத்து, ஒருங்கிணைந்த மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் நடத்தும் வகையில், வார்டு கவுன்சிலர் தேர்தல் நடத்தினால் போதும் என, மக்கள் தங்கள் கருத்தை முன் வைத்துள்ளனர்.

அப்போது தான், தங்கள் பகுதியில் அடிப்படை தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும் எனவும், மாநகராட்சியுடன் இணைக்கப்படாமல் ஊராட்சி தேர்தல் நடத்தினால், எவ்வித பலனும் இல்லை என்றும் நலச்சங்கத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X