பொது செய்தி

இந்தியா

'ஆன்லைன்' தேர்வு பாரபட்சமானது சுப்ரீம் கோர்ட்டில் கேரளா கருத்து

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி-'ஆன்லைன் தேர்வு நடத்தினால் 'லேப்டாப், மொபைல் போன்' உள்ளிட்ட சாதனங்கள் இல்லாத ஏழை மாணவர்களால் அதில் பங்கேற்க இயலாது. எனவே ஆன்லைனில் தேர்வு நடத்துவது பாரபட்சமான அணுகுமுறை' என, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்

புதுடில்லி-'ஆன்லைன் தேர்வு நடத்தினால் 'லேப்டாப், மொபைல் போன்' உள்ளிட்ட சாதனங்கள் இல்லாத ஏழை மாணவர்களால் அதில் பங்கேற்க இயலாது. எனவே ஆன்லைனில் தேர்வு நடத்துவது பாரபட்சமான அணுகுமுறை' என, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.latest tamil newsகேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரளாவில் கொரோனா வைரசால் நிலவும் சூழலை கருத்தில் வைத்து, அறிவிக்கப்பட்ட தேர்வை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.


latest tamil news


மேலும், இதுகுறித்து பதிலளிக்கும்படி கேரள அரசுக்கும் 'நோட்டீஸ்' அனுப்பியது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஏப்ரலில் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக நடத்தப்பட்டன. அதேபோல் பிளஸ் 1 தேர்வுகளும் நடத்தப்படும்.

ஆன்லைன் தேர்வு நடத்தினால் லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்கள் இல்லாத ஏழை எளிய மாணவர்களால் அதில் பங்கேற்க இயலாது.இது ஒருதலைபட்சமான, பாரபட்சமான அணுகுமுறையாக இருக்கும். எனவே, நேரில் வந்து மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
13-செப்-202112:05:25 IST Report Abuse
sankaseshan Communists always think and act differently for their selfish activities and not in overall interests of the nation . People like them who have their masters in foreign will talk like thus only .
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
13-செப்-202111:45:44 IST Report Abuse
S.Baliah Seer ஆன்லைன் தேர்வு ஒரு ஏமாற்றுவேலை.அது ஒரு தேர்வே அல்ல.வசதிப்படைத்தவர்களுக்காக தற்போதைய மத்திய அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது.கல்வியை மாநிலப்பட்டியலில் கொண்டுவராத வரை இதுபோன்ற அக்கிரமங்கள் தொடர்ந்து நடக்கும்.உச்சநீதி மன்றத்தில் நியாயம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Rate this:
Cancel
Solai - Bangalore,இந்தியா
13-செப்-202109:51:08 IST Report Abuse
Solai இதுவும் பாரபட்சமானது.சைக்கிள் பைக் இல்லாத மாணவர்கள் எப்படி கல்லூரிக்கு வருவார்கள்.ஆகவே அவரவர் வீட்டில் வைத்து பரீட்சை எழுத அனுமதிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X