பொது செய்தி

தமிழ்நாடு

'கிரேட்டர் பிளமிங்கோ' பறவைகள் பழவேற்காடு ஏரியில் முகாம்

Added : செப் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி. : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில், இரை தேடி முகாமிட்டுள்ள 'கிரேட்டர் பிளமிங்கோ' எனப்படும், பெரும் பூநாரைகள், காண்போரை வசீகரிக்கும் வகையில் உள்ளன. செந்நிறம் கலந்த வெண் நிற உடலும், நீண்ட சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் கொண்டவை. இப்பறவைகள் கூட்டம், கூட்டமாகப் இடம் பெயர்ந்து தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ப, சதுப்பு

கும்மிடிப்பூண்டி. : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில், இரை தேடி முகாமிட்டுள்ள 'கிரேட்டர் பிளமிங்கோ' எனப்படும், பெரும் பூநாரைகள், காண்போரை வசீகரிக்கும் வகையில் உள்ளன.

செந்நிறம் கலந்த வெண் நிற உடலும், நீண்ட சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் கொண்டவை. இப்பறவைகள் கூட்டம், கூட்டமாகப் இடம் பெயர்ந்து தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ப, சதுப்பு நில பகுதிகளில் இரை தேடி செல்வது வழக்கம். கும்மிடிப்பூண்டி அருகே, சின்னமாங்கோடு மீனவ கிராம படகு துறையில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் ஆயிரக்கணக்கான கிரேட்டர் பிளமிங்கோ பறவைகள் இரை தேடி பழவேற்காடு ஏரியை சூழந்துள்ளன. ஆழமற்ற நீரில், வரிசையாக நின்று, தலையை நீருக்குள் ஆழ்த்தி, இரை தேடும் அழகு, காண்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்து உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
13-செப்-202111:37:42 IST Report Abuse
JeevaKiran புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X