பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
செப்., 13, 2010சென்னையில், 1931 ஜன., 10ல் பிறந்தவர், ஆர்.சூடாமணி. 5வது வயதில் அம்மை நோய் தாக்கியதால், உடல் வளர்ச்சி தடைபட்டது. அதனால் வீட்டிலேயே பாடம் பயின்றார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் புலமை பெற்றார்; சிறந்த ஓவியராகவும் விளங்கினார்.இவரது முதல் சிறுகதையான, 'காவேரி' 1957ல், 'கலைமகள்' இதழில் வெளியானது. 'சுதேசமித்திரன், தினமணி, கல்கி, ஆனந்தவிகடன், குங்குமம்' என பல்வேறு
 இதே நாளில் அன்று

செப்., 13, 2010
சென்னையில், 1931 ஜன., 10ல் பிறந்தவர், ஆர்.சூடாமணி. 5வது வயதில் அம்மை நோய் தாக்கியதால், உடல் வளர்ச்சி தடைபட்டது. அதனால் வீட்டிலேயே பாடம் பயின்றார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் புலமை பெற்றார்; சிறந்த ஓவியராகவும் விளங்கினார்.இவரது முதல் சிறுகதையான, 'காவேரி' 1957ல், 'கலைமகள்' இதழில் வெளியானது. 'சுதேசமித்திரன், தினமணி, கல்கி, ஆனந்தவிகடன், குங்குமம்' என பல்வேறு பத்திரிகைகளில் கதை, நாவல்கள் எழுதினார்.
ஆங்கிலத்தில், 'சூடாமணி ராகவன்' என்ற பெயரில் எழுதினார்; 600 சிறுகதைகளுக்கு மேல் தமிழில் படைத்துள்ளார்.விவேகானந்தர் மற்றும் காந்தி மீது பற்றுடையவராக இருந்தார். இறுதி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. 2010 செப்., 13ல் தன் 79வது வயதில் இயற்கை எய்தினார். சூடாமணியின் விருப்பப்படி, அவரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், ராமகிருஷ்ண மடத்திற்கு எழுதி வைக்கப்பட்டன.எழுத்தாளர் ஆர்.சூடாமணி காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-செப்-202102:20:32 IST Report Abuse
Bhaskaran மிக அருமையான எழுத்தாளர் நான் அவர் நூல்கள் நூலகத்தில் படித்துள்ளேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X