சி.எம்.டி.ஏ., காலி பணியிடம் விரைவில் நிரப்ப நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சி.எம்.டி.ஏ., காலி பணியிடம் விரைவில் நிரப்ப நடவடிக்கை

Added : செப் 13, 2021
Share
சென்னை : சி.எம்.டி.ஏ.,வில், உதவி திட்ட அதிகாரி, திட்ட உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், பல்வேறு நிலைகளில் காலியாக இருந்த, 176 பணியிடங்களை நேரடி தேர்வு வாயிலாக நிரப்பும் அறிவிப்பு, 2015ல் வெளியானது.இதில் சில பணியிடங்களுக்கான தேர்வு

சென்னை : சி.எம்.டி.ஏ.,வில், உதவி திட்ட அதிகாரி, திட்ட உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், பல்வேறு நிலைகளில் காலியாக இருந்த, 176 பணியிடங்களை நேரடி தேர்வு வாயிலாக நிரப்பும் அறிவிப்பு, 2015ல் வெளியானது.இதில் சில பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.இருப்பினும், பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக விண்ணப்பதாரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, இதற்கான அறிவிக்கையை ரத்து செய்ய சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது.இந்நிலையில், நிர்வாக ரீதியான, 131 அமைச்சு பணியாளர்களுக்கான இடங்களை நிரப்ப, 2020 அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதற்கான தேர்வு, 2021 பிப்ரவரியில் நடத்தப்பட்டது.தேர்தல் நடைமுறைகள் வந்த நிலையில், இவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டதாக புகார் உள்ளது. இதையடுத்து, தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்ப சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:சி.எம்.டி.ஏ.,வில், தற்போதைய நிலவரப்படி, 17 உதவி திட்ட அலுவலர், 72 திட்ட உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இது தவிர வரைவாளர், சட்ட அலுவலர் போன்ற பணியிடங்களையும் நிரப்ப வேண்டியுள்ளது.இந்த இடங்களை நிரப்பினால் மட்டுமே, சி.எம்.டி.ஏ.,வில் 'ஆன்லைன்' முறையிலான கட்டுமான பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.முந்தைய பணியாளர் தேர்வு போன்று இல்லாமல், ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் ஊழல் அதிகாரிகள் தலையீடு இல்லாமல், இதற்கான தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X