சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தையை கொலை செய்த 'போதை' மகன் கைது

Added : செப் 13, 2021
Share
Advertisement
எம்.ஜி.ஆர். நகர் : மது போதையில், தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.சென்னை, எம்.ஜி.ஆர். நகர், சூளைபள்ளம், வெங்கட்ராமன் சாலையைச் சேர்ந்தவர் செல்வம், 47. இவர், ஜாபர்கான்பேட்டை, ஆர்.வி.நகரில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சுமதி, 44.இவர்களுக்கு பிரகாஷ், 20, என்ற மகன் உள்ளார். மது போதைக்கு அடிமையான பிரகாஷ், அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார். இதனால்

எம்.ஜி.ஆர். நகர் : மது போதையில், தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, எம்.ஜி.ஆர். நகர், சூளைபள்ளம், வெங்கட்ராமன் சாலையைச் சேர்ந்தவர் செல்வம், 47. இவர், ஜாபர்கான்பேட்டை, ஆர்.வி.நகரில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சுமதி, 44.இவர்களுக்கு பிரகாஷ், 20, என்ற மகன் உள்ளார். மது போதைக்கு அடிமையான பிரகாஷ், அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார். இதனால் விரக்திஅடைந்த செல்வம், சில ஆண்டுகளுக்கு முன், மகனை வீட்டை விட்டு வெளியேற்றினார்.

இதையடுத்து, துர்க்கையம்மன் தெருவில் பிரகாஷ் தங்கி வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பிரகாஷ் தன் தாயை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றார். அப்போது, மது போதையில் இருந்ததால், தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், கத்தியால் தந்தையின் பின் கழுத்து மற்றும் வயிற்றில் குத்தினார்.இதில், மயங்கி விழுந்த செல்வத்தை, அவரது மனைவி மீட்டு, கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது.தகவல் அறிந்த எம்.ஜி.ஆர். நகர் போலீசார், பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். மது போதையில் தந்தையை மகன் குத்தி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X