இன்சுலின் கிடைக்காம தவிக்கிறாங்க: இனிப்பு நோய் குழந்தைங்க| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்சுலின் கிடைக்காம தவிக்கிறாங்க: 'இனிப்பு நோய்' குழந்தைங்க

Added : செப் 13, 2021
Share
கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 'டைப் 1'சர்க்கரை நோயால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஏழை குழந்தைகளுக்கு இன்சுலின் தொடர்ந்து கிடைக்க உதவி செய்யுமாறு இதயங்கள் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர்கிருஷ்ணன் சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.கோவை மாவட்டத்தில் சுமார் 1500 குழந்தைகளுக்கு மேல் 'டைப் 1' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒன்று
இன்சுலின் கிடைக்காம தவிக்கிறாங்க: 'இனிப்பு நோய்' குழந்தைங்க

கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 'டைப் 1'சர்க்கரை நோயால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஏழை குழந்தைகளுக்கு இன்சுலின் தொடர்ந்து கிடைக்க உதவி செய்யுமாறு இதயங்கள் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர்கிருஷ்ணன் சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் சுமார் 1500 குழந்தைகளுக்கு மேல் 'டைப் 1' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒன்று முதல் 14 வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகளுக்கு இன்சுலின்
சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்யும் குளூக்கோமீட்டர் உள்ளிட்ட கருவிகள் வழங்க உதவி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இதயங்கள் அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியதாவது:
இந்த நோயை துவக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற் கொள்ள தவறினால் டயபடிக் கோமாவிற்கு சென்று மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.இந்நோய் பாதிக்கப்பட்டகுழந்தைகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் மற்றும்மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நல்ல இன்சுலின் வாங்க மாதம் 3000 ரூபாய் தேவை. ஆனால் ஏழை எளிய மக்களுக்கு இது சாத்தியமில்லாத ஒன்று. அதேபோல் இந்த இன்சுலின் மருந்தை பிரிஜில் வைத்துதான்
பயன்படுத்த வேண்டும்.

விபரம் தெரியாத ஏழை பெற்றோர் பலர் அதனை வெளியே வைத்து பயன்படுத்துகின்றனர். இந்த மருந்தால் குழந்தைக்கு எந்த பயனும் இல்லை.அதே சமயம் இந்த வயதில்இன்சுலின் போடுவதை தவிர்த்தால் 20 வயதில் சிறுநீரகம் செயலிழந்து இறந்து விடுவார்கள். அந்த
வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு இதயங்கள்
அறக்கட்டளை சார்பில் பேனா வடிவ இன்சுலின் சர்க்கரை அளவை பரிசோதனை செய்யும் குளூக்கோமீட்டர் இன்சுலின் கேட்ரிஜ் பதப்படுத்த தேவையான பிரிஜ் வழங்கியுள்ளோம்.

எனினும் நுாற்றுக்கணக்கான ஏழை குழந்தைகள் இன்சுலின் உள்ளிட்ட மருத்துவ உதவிகள்
கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு ஏழை குழந்தைக்கு இன்சுலின் மற்றும்
மருந்து வழங்க 30 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.உதவும் மனம் படைத்தவர்கள்
90428 58882, 85264 21150 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மருத்துவ உதவிக்காக காத்திருக்கும் குழந்தைகளும் இந்த எண்ணில் அழைக்கவும் இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X