பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி நடன நிகழ்ச்சி மூவர் மீது பாய்ந்தது வழக்கு

Added : செப் 13, 2021
Share
Advertisement
திருவல்லிக்கேணி : சென்னையில், அனுமதியின்றி நடன நிகழ்ச்சி நடத்திய மூவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சென்னையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி இறுதி ஊர்வலம், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கென சிலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இவற்றை மீறுவோர் மீது,

திருவல்லிக்கேணி : சென்னையில், அனுமதியின்றி நடன நிகழ்ச்சி நடத்திய மூவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி இறுதி ஊர்வலம், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கென சிலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இவற்றை மீறுவோர் மீது, பாரபட்சமின்றி சென்னை மாநகராட்சி, காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அண்ணாசாலையில் உள்ள 'பால்ஸ் ரெஸ்டாரன்ட்'டில் அனுமதியின்றி நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.அதில், அளவுக்கு அதிகமான கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். இதில் பங்கேற்றோர், சமூக இடைவெளி, முககவசம் அணியாமலும் இருந்துள்ளனர். இதை அறிந்த திருவல்லிக்கேணி போலீசார், அனுமதியின்றி நடன நிகழ்ச்சியை நடத்திய முத்துராஜ், 62; ரஜினி, 32; ராஜி, 34, ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X