தாம்பரம் மாநகராட்சியில் 5 நகராட்சி; 5 பேரூராட்சி இணைப்பு! அரசாணை வெளியீட்டால் புறநகர் மக்கள் மகிழ்ச்சி| Dinamalar

தமிழ்நாடு

தாம்பரம் மாநகராட்சியில் 5 நகராட்சி; 5 பேரூராட்சி இணைப்பு! அரசாணை வெளியீட்டால் புறநகர் மக்கள் மகிழ்ச்சி

Added : செப் 13, 2021 | கருத்துகள் (2)
Share
சென்னை : சென்னையின் நுழைவாயிலாக திகழும் தாம்பரம் மாநகராட்சிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஐந்து நகராட்சிகள், ஐந்து பேரூராட்சிகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த புதிய அறிவிப்பால், புறநகர் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுவதோடு, சென்னை மாநகராட்சிக்கு நிகராக வளர்ச்சி அடையும் என, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி
தாம்பரம் மாநகராட்சியில் 5 நகராட்சி; 5 பேரூராட்சி  இணைப்பு!  அரசாணை வெளியீட்டால் புறநகர் மக்கள் மகிழ்ச்சி

சென்னை : சென்னையின் நுழைவாயிலாக திகழும் தாம்பரம் மாநகராட்சிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஐந்து நகராட்சிகள், ஐந்து பேரூராட்சிகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த புதிய அறிவிப்பால், புறநகர் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுவதோடு, சென்னை மாநகராட்சிக்கு நிகராக வளர்ச்சி அடையும் என, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னை, அனைத்து துறைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மாநகரின் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தொழில், வேலை வாய்ப்பு, உயர் கல்வி, மருத்துவம் என பல காரணங்களால், சென்னையில் குடியேறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், சென்னைக்கு இணையாக, புறநகர் பகுதிகளிலும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லவாரம், பெருங்களத்துார் உள்ளிட்ட பல பகுதிகளில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அடிப்படை கட்டமைப்புகள் இல்லை.அதிகாரப்பூர்வம்மேற்கண்ட பகுதிகள் புதிதாக உருவான, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பதால், சென்னையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை, அங்கு செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

குறிப்பாக, குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், அடிப்படை சாலை வசதிகள் உள்ளிட்டவற்றை பெற, அப்பகுதி மக்கள் பெரிதும் போராடினர்.எனவே, தங்கள் பகுதிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் அல்லது தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், தாம்பரம் மாநகராட்சி குறித்த அறிவிப்பு வெளியானது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும், எந்தெந்த பகுதிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்படும் என்ற விரிவான விபரங்கள் வெளியாகாததால், மக்கள் குழப்பத்தில் இருந்தனர்.இந்நிலையில், சென்னையை ஒட்டி உள்ள, ஐந்து நகராட்சிகள், ஐந்து பேரூராட்சிகளை இணைந்து, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுவதாக, நேற்று வெளியான அதிகாரப்பூர்வ அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிவகைஅதன் படி, தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், செம்பாக்கம் ஆகிய ஐந்து நகராட்சிகளும், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்துார், பீர்க்கங்காரணை, திருநீர்மலை ஆகிய ஐந்து பேரூராட்சிகளும் இணைக்கப்பட்டு, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர், மாவட்ட கலெக்டர் பரிந்துரையை ஏற்று, தாம்பரம் மாநகராட்சிக்கான இந்த உத்தரவை, நகராட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்து உள்ளார்.மேலும், இந்த உத்தரவில், பன்னாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ள, 'மெப்ஸ்' நிறுவனம், பழமை, பெருமை நிறைந்த பள்ளி, கல்லுாரிகள், வர்த்தக நிறுவனங்களின் கிளைகள் தாம்பரத்தில் உள்ளதால், வருவாய் உயர்ந்திட வழிவகை உள்ளது.நடவடிக்கைஅதோடு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மருத்துவம், சுகாதாரம், புதிய தொழிலகம், வேலைவாய்ப்புகள் உருவாகும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது.அதிகாரப்பூர்வ அரசாணை வெளியானதை அடுத்து, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மாநகராட்சிக்கான அலுவலகம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் அதிகாரிகள் நியமனம் குறித்த பணிகள் தீவிர கதியில் நடப்பதாக, அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஊராட்சி மக்கள் ஏமாற்றம்பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 ஊராட்சிகள், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 150 வார்டுகள், 15 தலைவர்கள், 11 ஒன்றிய கவுன்சிலர்களை உள்ளடக்கிய இந்த பகுதிகள், தாம்பரம் மாநகராட்சியுடன் இணையும் என ஊராட்சி மக்கள் எதிர்பார்த்த நிலையில், அரசின் நேற்றைய அறிவிப்பு அப்பகுதி மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X