பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், பவர் ஹவுஸ் முதல் 80 அடி சாலை வரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடக்க உள்ளது. இதனால், செப்., 14ல் இருந்து ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகர போலீசார் நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போரூர் - கோடம்பாக்கம் மேம்பாலம் வரை செல்லும் வாகன போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை

சென்னை : சென்னை, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், பவர் ஹவுஸ் முதல் 80 அடி சாலை வரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடக்க உள்ளது.

இதனால், செப்., 14ல் இருந்து ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகர போலீசார் நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போரூர் - கோடம்பாக்கம் மேம்பாலம் வரை செல்லும் வாகன போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை கோடம்பாக்கம் மேம்பாலம் - போரூர் சாலிகிராமம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சிக்னல் வரை சென்று, இடது புறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் காவல் நிலையம் வழியாக ராஜமன்னார் சாலை வழியாக செல்லலாம் வடபழநி சிக்னலில் இருந்து, ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக்கூடாது.

மாறாக, பவர் ஹவுஸ் சிக்னல், அசோக் நகர் காவல் நிலையம் சிக்னலில் வலதுபுறமாக திரும்பி செல்ல வேண்டும் அசோக் பில்லரில் இருந்து, கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலை வழியாக சென்று, இடது புறமாக திரும்பி, துரைசாமி சாலை வழியாக செல்லலாம் துரைசாமி சாலை சிக்னலில் இருந்து பவர் ஹவுஸ் சிக்னல் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல அனுமதிக்கப்படும். ஆனால், பவர் ஹவுஸ் சிக்னலில் இருந்து, ஆற்காடு சாலை, துரை சாமி சாலை சிக்னல் வழியாக செல்ல அனுமதி இல்லை. இது ஒரு வழிபாதையாகமாற்றப்பட்டுள்ளது வாகனங்கள் அம்பேத்கர் சாலை, 2வது அவென்யூ - 100 அடிசாலை செல்ல அனுமதிக்கப்படும். ஆனால், 100 அடி சாலை சந்திப்பில் இருந்து, 2வது அவென்யூ செல்ல அனுமதி இல்லை. இந்த சாலையும் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது

வாகனங்கள், அம்பேத்கர் சாலையில், பவர் ஹவுஸ் சிக்னலில் இருந்து, அசோக் நகர் காவல் நிலையம் நோக்கி செல்லலாம். ஆனால், அசோக் நகர் காவல் நிலையத்தில் இருந்து, பவர் ஹவுஸ் செல்ல அனுமதி இல்லை. இந்த சாலையும் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X