வீரபத்ரேஸ்வரா விருது: எடியூரப்பா தேர்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வீரபத்ரேஸ்வரா விருது: எடியூரப்பா தேர்வு

Added : செப் 13, 2021
Share
பெலகாவி : வீரசைவ -லிங்காயத் அமைப்பு, முதன் முறையாக 'வீரபத்ரேஸ்வரா விருது' வழங்குகிறது. இவ்விருதுக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பெலகாவி ஹூக்கேரியின், ஹரே மடத்தின் சந்திரசேகர சிவாச்சார்ய சுவாமிகள் நேற்று கூறியதாவது:முதன் முறையாக மடம் சார்பில் வீரபத்ரேஸ்வரா விருது வழங்கப்படுகிறது. 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள் காணிக்கையாக

பெலகாவி : வீரசைவ -லிங்காயத் அமைப்பு, முதன் முறையாக 'வீரபத்ரேஸ்வரா விருது' வழங்குகிறது. இவ்விருதுக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெலகாவி ஹூக்கேரியின், ஹரே மடத்தின் சந்திரசேகர சிவாச்சார்ய சுவாமிகள் நேற்று கூறியதாவது:முதன் முறையாக மடம் சார்பில் வீரபத்ரேஸ்வரா விருது வழங்கப்படுகிறது. 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள் காணிக்கையாக வழங்கப்படும். இவ்விருதுக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மடங்கள், கோவில்களுக்கு உதவி செய்வதில் அவர் முன்னிலையில் இருப்பதால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். தன் குல தெய்வம் வீரபத்ரேஸ்வரர் என்பதால், விருதை பெற எடியூரப்பா ஒப்புக்கொண்டார். நாளை, மாலை 6:00 மணிக்கு பெங்களூரின் பசவேஸ்வரா மண்டபத்தில் வீரபத்ரேஸ்வர ஜெயந்தி நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X