இந்தியா

விநாயகர் சிலைகள் குவித்து வைப்பு மக்கள் உணர்வை புண்படுத்தும் பெங்., மாநகராட்சி

Added : செப் 13, 2021
Share
Advertisement
பெங்களூரு : விநாயகர் சதுர்த்தி முடிந்த பின் சிலைகளை கரைக்க அனைத்து ஏற்பாடுகளை செய்துள்ளதாக, பெங்களூரு மாநகராட்சி கூறியிருந்தது. ஆனால், எலஹங்கா மண்டலத்தின் ஹெப்பால் ஏரியை ஒட்டியுள்ள குளம் அருகில் கவுரி, விநாயகர் சிலைகளை கரைக்காமல் குவித்து வைத்து மக்களின் உணர்வை, மாநகராட்சி நிர்வாகம் புண்படுத்தியுள்ளது.விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய பின் பொது மக்கள், ஏரி அல்லது

பெங்களூரு : விநாயகர் சதுர்த்தி முடிந்த பின் சிலைகளை கரைக்க அனைத்து ஏற்பாடுகளை செய்துள்ளதாக, பெங்களூரு மாநகராட்சி கூறியிருந்தது. ஆனால், எலஹங்கா மண்டலத்தின் ஹெப்பால் ஏரியை ஒட்டியுள்ள குளம் அருகில் கவுரி, விநாயகர் சிலைகளை கரைக்காமல் குவித்து வைத்து மக்களின் உணர்வை, மாநகராட்சி நிர்வாகம் புண்படுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய பின் பொது மக்கள், ஏரி அல்லது குளங்களின் அருகில், கவுரி, விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து செல்ல வேண்டும். நீரில் இறங்கி சிலைகளை கரைக்க முற்படக்கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் கூறிஇருந்தனர்.ஆனால் கூறியதை போல, சிலைகளை கரைக்க மாநகராட்சி எந்த வசதியும் செய்யவில்லை. எலஹங்கா மண்டலத்தின், ஹெப்பால் ஏரியை ஒட்டியுள்ள குளம் அருகில் நுாற்றுக்கணக்கான கவுரி, விநாயகர் சிலைகள் கரைக்கப்படாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதை பார்த்து பக்தர்கள்வருத்தம் அடைந்து உள்ளனர்.பக்தி, சிரத்தையுடன் பூஜிக்கப்பட்ட கவுரி, விநாயகர் சிலைகளை குப்பை போல போட்டு வைத்திருப்பது, மக்களின் பக்தி உணர்வை புண்படுத்துகிறது. உடனடியாக சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யும்படி பொது மக்கள் வலியுறுத்தினர்.எலஹங்கா மண்டலத்தின், தலைமை பொறியாளர் ரங்கநாத் கூறுகையில், ''பொது மக்கள் பலரும் நள்ளிரவு வரை மொபைல் டாங்கர்களில் விநாயகர், சிலைகளை கரைப்பதற்காக கொடுத்தனர். இவற்றை கொண்டு வந்த ஊழியர்கள், குளம் அருகில் வைத்திருந்தனர். நீச்சல் வீரர்கள் மூலம், சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X