அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வில் அ.தி.மு.க., இரட்டை வேடம்: அமைச்சர் குற்றச்சாட்டு

Added : செப் 13, 2021
Share
Advertisement
ராஜபாளையம்:''நீட்''தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது," என ராஜபாளையத்தில் நடந்த தடுப்பூசிமுகாம் ஆய்வில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது: 'நீட்' விவகாரத்தில் அ.தி.மு.க.,வின் சாயம் வெளுத்துவிட்டது. அவர்கள் இரட்டை வேடம் போட்டு வருகின்றனர். சேலத்தில் மாணவன் அநியாயமாக உயிரிழந்துள்ளார். இனிமேல்

ராஜபாளையம்:''நீட்''தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது," என ராஜபாளையத்தில் நடந்த தடுப்பூசிமுகாம் ஆய்வில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது: 'நீட்' விவகாரத்தில் அ.தி.மு.க.,வின் சாயம் வெளுத்துவிட்டது. அவர்கள் இரட்டை வேடம் போட்டு வருகின்றனர். சேலத்தில் மாணவன் அநியாயமாக உயிரிழந்துள்ளார். இனிமேல் இதுபோல் நடக்கக் கூடாது என்ற வருத்தத்தை முதல்வர் பதிவு செய்துள்ளார். 'நீட்' தேர்வுக்கு எதிராக அதில் இருந்து விலக்கு பெற்று தீருவது என்ற வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.2017 ல் அ.தி.மு.க., அரசு நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் ஒன்றுபட்டு நிறைவேற்றினார். அ.தி.மு.க., தொடர்ந்து அந்த தீர்மானத்திற்கு அழுத்தம் தராமல் ஜனாதிபதியிடம் எந்த வலியுறுத்தலும் செய்யாத நிலையில் அது திரும்பி வந்துவிட்டது.எனினும் தி.மு.க., அரசின் தொடர் நடவடிக்கையால் அடுத்தடுத்து வரும் காலத்தில் மாணவர்களுக்கு 'நீட் தொல்லை இருக்காது என கருதுகிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X