பொது செய்தி

தமிழ்நாடு

'தமிழக மக்களின் அன்பு நெஞ்சை விட்டு நீங்காது'

Added : செப் 13, 2021
Share
Advertisement
சென்னை:'தமிழக மக்களின் அளப்பரிய அன்பும், ஒத்துழைப்பும் மனதை விட்டு எப்போதும் நீங்காது' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். பஞ்சாப் கவர்னராக மாற்றப்பட்டுள்ள புரோஹித் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக மக்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் இருந்து, மிக சிறந்த அன்பும், வாழ்த்துகளும் பெற்று, அதற்கு நன்றி

சென்னை:'தமிழக மக்களின் அளப்பரிய அன்பும், ஒத்துழைப்பும் மனதை விட்டு எப்போதும் நீங்காது' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். பஞ்சாப் கவர்னராக மாற்றப்பட்டுள்ள புரோஹித் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக மக்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் இருந்து, மிக சிறந்த அன்பும், வாழ்த்துகளும் பெற்று, அதற்கு நன்றி தெரிவித்தவனாக விடைபெறுகிறேன்.இந்த மாநிலம், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் களத்தை கண்டது. இதில், பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் இருந்தாலும், மக்கள் அன்பாகவும், வரவேற்கக் கூடிய வகையிலும் நடந்து கொண்டனர். இதற்கு என் மனமார்ந்த நன்றி.மாநில அளவில் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பாளராக இருந்த நான், அரசியல் சட்டம் வழங்கிய விதிகளின் அடிப்படையில், சில பொறுப்புகளை வகித்தேன். என் முடிவுகளை மக்கள் புரிந்து, அதற்கு ஆதரவு அளித்தமைக்கு மகிழ்ச்சியை பதிவு செய்கிறேன். தமிழகத்தின் வரலாற்று பாரம்பரியமிக்க மற்றும் சமூக ரீதியான சிறந்த கலாசாரத்தை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X