அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மத்திய அரசு திட்டங்கள் மக்களிடத்தில் சேர தீவிர நடவடிக்கை': நிர்மலா சீதாராமன் தகவல்

Added : செப் 13, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை:"மத்திய அரசு திட்டங்கள் மக்களிடத்தில் சேர பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக," வங்கியாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.அருப்புக்கோட்டையில் வங்கியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்திய அளவில் 112 பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டதில், தமிழகத்தில்

அருப்புக்கோட்டை:"மத்திய அரசு திட்டங்கள் மக்களிடத்தில் சேர பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக," வங்கியாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.அருப்புக்கோட்டையில் வங்கியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்திய அளவில் 112 பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டதில், தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் அடங்கும். ஏற்கனவே விருதுநகரில் அறிவிக்கப்பட்டது போல் இப்பகுதியில் உள்ள சிறு, குறு தொழில் முனைவோருக்கு முறையாக வங்கிகள் கடன் வழங்குகிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறேன். மத்திய அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களிடத்தில் சென்று சேர வேண்டும் என பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனடிப்படையில் இப்பகுதியில் வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. பின்தங்கிய மாவட்டங்கள் மட்டுமல்லாமல் அனைத்து பகுதியில் உள்ள சிறு-, குறு தொழில் முனைவோருக்கு முத்ரா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் கடன் வழங்கப்படும்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் வங்கிக் கடன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏராளமான திட்டங்கள் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு ஏழை எளிய மக்களை சென்றடைய வேண்டும் என்பது தான் ஒரே குறிக்கோள், என்றார். ஆய்வுக்கூட்டத்தின் முடிவில் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஸ்டால்களை பார்வையிட்ட போது, கூடை முடைவது, தோல் பொருட்கள் தயாரிப்பது, சிறுதானியங்கள் மூலம் தின் பண்டங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில் முனைவோருக்கு கடன் வழங்கப்பட்டு சிறப்பாக செய்து வருவதாகவும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.மத்திய இணையமைச்சர் முருகன், கலெக்டர் மேகநாத ரெட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ.,மான்ராஜ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X