அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொதுச்சேவை சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

Added : செப் 13, 2021
Share
Advertisement
சென்னை:'பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை, அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம், தமிழகத்திற்கு கட்டாயம் தேவை என்பதை, உயர் நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பான வழக்கில், மூத்த நீதிபதி ஒருவர், 'தமிழகத்தில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டிருந்தால்,

சென்னை:'பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை, அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம், தமிழகத்திற்கு கட்டாயம் தேவை என்பதை, உயர் நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பான வழக்கில், மூத்த நீதிபதி ஒருவர், 'தமிழகத்தில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டிருந்தால், அரசு அலுவலகங்களில், ஊழல்கள் கணிசமாக குறைந்திருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.இச்சட்டம் இயற்றப்பட்டால், அரசு அலுவலகங்களில் ஊழல்களை களைய முடியும் என்பதை, சென்னை உயர் நீதிமன்றம் மட்டுமின்றி, துாய்மையான நிர்வாகத்தை விரும்பும் அனைவரும் எற்பர். அரசு அலுவலகங்களில் ஊழலும், மெத்தனமும் ஒழிக்கப்பட்டால், அது தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும்.இந்த நிலைப்பாட்டில், தமிழக அரசுக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. கவர்னர் உரையில், வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு பெறும் நிலையில் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X