பொது செய்தி

இந்தியா

ஆசிரியர்கள் விடுமுறை குறைக்க திட்டம்

Added : செப் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு : இம்முறை பாடங்களை குறைக்காமல், ஆசிரியர்களின் விடுமுறையை குறைக்க அரசு ஆலோசிக்கிறது.கொரோனா பரவுவதை தடுக்க, பள்ளி, கல்லுாரிகள் பல மாதங்கள் மூடப்பட்டிருந்தன. கொரோனா கட்டுக்குள் வருவதால் பள்ளி, கல்லுாரிகள் படிப்படியாக திறக்கப்பட்டுள்ளன. இதனால் பாடங்களை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.கல்வியாண்டு முடிவதற்குள் பாடங்களை முடிப்பது கஷ்டம்

பெங்களூரு : இம்முறை பாடங்களை குறைக்காமல், ஆசிரியர்களின் விடுமுறையை குறைக்க அரசு ஆலோசிக்கிறது.

கொரோனா பரவுவதை தடுக்க, பள்ளி, கல்லுாரிகள் பல மாதங்கள் மூடப்பட்டிருந்தன. கொரோனா கட்டுக்குள் வருவதால் பள்ளி, கல்லுாரிகள் படிப்படியாக திறக்கப்பட்டுள்ளன. இதனால் பாடங்களை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.கல்வியாண்டு முடிவதற்குள் பாடங்களை முடிப்பது கஷ்டம் என்பதால் பாடங்களை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.பாடங்களை குறைத்தால் அடுத்த வகுப்புகளில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் பாடங்களை குறைக்காமல் ஆசிரியர்களின் விடுமுறை நாட்களை குறைத்து பாடங்களை நிர்ணயித்த காலத்துக்குள் முடிக்க அரசு ஆலோசிக்கிறது.

இது ஆசிரியர்களுக்கு, அதிர்ச்சியளித்துள்ளது.இது தொடர்பாக, தொடக்க, உயர்நிலைப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறியதாவது:தற்போதுள்ள பாடங்களை நடத்தி முடித்தால் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். பாடங்களை குறைப்பதால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும். ஒன்றரை ஆண்டாக மாணவர்களுக்கு சரியாக கல்வி போதிக்க முடியவில்லை. இச்சூழ்நிலையில் பாடங்களை குறைப்பது சரியாக இருக்காது.மாணவர்களின் எதிர்காலத்தை கருதி, ஆசிரியர்களின் விடுமுறை நாட்களை குறைத்து பாடங்களை முடிக்க ஆலோசிக்கிறோம். இதற்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அவசியம். இது குறித்து அவர்களுடன், பேச்சு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-செப்-202102:21:18 IST Report Abuse
Bhaskaran தமிழ்நாட்டில் விடுமுறை குறைத்தால் ஆசிரியர்கள் சண்டைக்கு வருவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X