பொது செய்தி

இந்தியா

22 ஆண்டுக்கு பின் மகளை பழி தீர்த்த குடும்பத்தினர்பேத்தியின் மனதை மாற்றி திருமணம் செய்து பரபரப்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
மங்களூரு : தங்களின் எதிர்ப்பை மீறி வேறு மதத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட மகளை, 22 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினர் பழி வாங்கினர். பேத்தியின் மனதை மாற்றி தங்கள் மதத்தை சேர்ந்தவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.தட்சிண கன்னடா மங்களூரில் வசிப்பவர் வீரேஷ், 56. இவரது மனைவி யசோதா, 50. கதக்கை சேர்ந்த யசோதா, அடிப்படையில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஹிந்து மதத்தை

மங்களூரு : தங்களின் எதிர்ப்பை மீறி வேறு மதத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட மகளை, 22 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினர் பழி வாங்கினர்.

பேத்தியின் மனதை மாற்றி தங்கள் மதத்தை சேர்ந்தவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.தட்சிண கன்னடா மங்களூரில் வசிப்பவர் வீரேஷ், 56. இவரது மனைவி யசோதா, 50. கதக்கை சேர்ந்த யசோதா, அடிப்படையில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஹிந்து மதத்தை சேர்ந்த வீரேஷை திருமணம் செய்து கொண்ட பின், ஹஜ்ரத் என்ற பெயரை யசோதா என, மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 22 ஆண்டுகளாகிறது.கணவர் கட்டுமான பணி செய்கிறார்.

மனைவி அடுக்கு மாடி குடியிருப்புகளில், வீட்டு வேலை செய்கிறார். இத்தம்பதிக்கு மகள், மகன் உள்ளனர்.மகள் ரேஷ்மாவை கஷ்டப்பட்டு உழைத்து, எம்.எஸ்சி., படிக்க வைத்தனர். மகன் எஸ்.எஸ்.எல்.சி., படிக்கிறார்.மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்ய, பெற்றோர் விரும்பினர். பெங்களூரில் நல்ல பணியில் இருக்கும் இளைஞருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். சில மாதங்களுக்கு முன் மங்களூரில் ஆடம்பரமாக நிச்சயதார்த்தம் நடத்தினர்.இந்நிலையில் மகள் திடீரென காணாமல் போனார். வீட்டிலிருந்த பணம், தங்க நகைகளையும் காணவில்லை. அதிர்ச்சியடைந்த வீரேஷ், யசோதா தம்பதி, பர்கே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.போலீசார் விசாரணை நடத்திய போது, யசோதாவின் பெற்றோர் ரேஷ்மா மனதை மாற்றி, கதக்குக்கு அழைத்து சென்று, யசோதா அக்கா மகன் அக்பருக்கு திருமணம் செய்திருப்பது

தெரிந்தது.தங்களின் எதிர்ப்பை மீறி, எதிர்ப்பை மீறி வேறு மதத்தை சேர்ந்தவருக்கு திருமணம் செய்து கொண்ட யசோதாவை, அவரது குடும்பத்தினர் 22 ஆண்டு காத்திருந்து பழி வாங்கியுள்ளனர்.கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய மகள், தங்களுக்கு துரோகம் செய்ததுடன், தனக்கு அண்ணன் உறவிலுள்ளவரை, திருமணம் செய்து கொண்டதை, வீரேஷ், யசோதா தம்பதியால் தாங்க முடியவில்லை.தாங்கள் சேமித்து வைத்திருந்த பணம், தங்க நகைகளை மகள் திருடிச்சென்றதாக, புகார் செய்தனர்.இதையறிந்த ரேஷ்மா மற்றும் அக்பர் நேற்று முன் தினம், பர்கே போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். திருட்டு வழக்கில் ரேஷ்மாவையும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அக்பரையும், போலீசார் கைது செய்தனர்.
யசோதா கூறியதாவது:நான் காதலித்து திருமணம் செய்து கொண்ட போது, என் தாய் வீட்டினர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் எனக்கு குழந்தைகள் பிறந்து, மகள் திருமண வயது வந்த பின் என்னை பழி வாங்கியுள்ளனர். இதற்கு பதில் எனக்கு விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம்.மகளின் எதிர்க்காலம் நன்றாக இருக்க வேண்டும் என நாங்கள் செய்த தியாகம், பட்ட கஷ்டங்கள் மகளின் கண்ணுக்கு தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X