பொது செய்தி

இந்தியா

மங்களூரு விமான நிலையத்தின் பெயர் மாற்றம்அதானி குழும நிறுவனத்துக்கு திடீர் பின்னடைவு

Added : செப் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு : மங்களூரு விமான நிலையத்தின் பெயரை மாற்றிய அதானி குழும நிறுவனத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பழைய பெயரையே வைக்கும்படி, விமான நிலைய அபிவிருத்தி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவின் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தை, நிர்வகிக்கும் பொறுப்பை, அதானி குழும நிறுவனத்திடம், ஒப்பந்த அடிப்படையில், மத்திய அரசு ஒப்படைத்தது.கடும் எதிர்ப்புக்கிடையே, பொறுப்பை
 மங்களூரு விமான நிலையத்தின் பெயர் மாற்றம்அதானி குழும நிறுவனத்துக்கு திடீர் பின்னடைவு

பெங்களூரு : மங்களூரு விமான நிலையத்தின் பெயரை மாற்றிய அதானி குழும நிறுவனத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பழைய பெயரையே வைக்கும்படி, விமான நிலைய அபிவிருத்தி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவின் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தை, நிர்வகிக்கும் பொறுப்பை, அதானி குழும நிறுவனத்திடம், ஒப்பந்த அடிப்படையில், மத்திய அரசு ஒப்படைத்தது.கடும் எதிர்ப்புக்கிடையே, பொறுப்பை ஏற்றுக்கொண்ட அதானி நிறுவனம், மங்களூரு விமான நிலையத்தின் பெயரை, 'அதானி ஏர்போர்ட்' என மாற்றியது.அந்த நிறுவனத்தின் செயல்பாடு, தட்சிண கன்னட மாவட்ட மக்களின் கோபத்துக்குகாரணமானது. இது குறித்து சட்டப்போராட்டம் நடத்த, அரசியல் சாராத குழுவினர், விமான நிலையத்தின் பெயர் மாற்றம் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரி மங்களூரு விமான நிலைய ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதற்கு பதிலளித்த ஆணையம், 'விமான நிலையத்தின் பெயரை மாற்ற ஒப்பந்த நிறுவனத்துக்கு அதிகாரமில்லை. பெயரை மாற்றுவது குறித்து ஒப்பந்தத்திலும் குறிப்பிடவில்லை' என, கூறியது.அதன்பின் குழுவினர், வக்கீல் மூலம் அதானி நிறுவனத்துக்கு 'நோட்டீஸ்' அனுப்பினர். விமான நிலைய ஆணையமும், மங்களூரு விமான நிலையத்துக்கு பழைய பெயரையே வைக்கும்படி அதானி நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.இதையடுத்து, அதானி நிறுவனம் விமான நிலையத்தின், அதிகாரப்பூர்வ டுவிட்டர், முகநுால், கூகுள்,விமான நிலைய நுழைவு வாசல், உட்பகுதியில் இருந்த போர்டில்,'மங்களூரு சர்வதேச விமானநிலையம்' என, பெயர் மாற்றம் செய்துள்ளது.சட்டப்போராட்டம் நடத்திய தில்ராஜ் ஆல்வா கூறியதாவது:அபிவிருத்தியை மனதில் கொண்டு மங்களூரு சர்வதேச விமான நிலையத்தை அதானி நிறுவனம் ஒப்பந்தத்துக்கு பெற்றுள்ளது. இதன் மூலம் விமான நிலையம், அபிவிருத்தியடைந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம் தான்.ஆனால், இந்த நிறுவனம் விமான நிலையத்தின் பெயரையே மாற்றியுள்ளது. இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்தது. அதானி நிறுவனம் பதிலளிக்கவில்லை.எனவே, ஒப்பந்த நிறுவனத்துக்கு பெயர் மாற்றும் உரிமை உள்ளதா என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட போது பெயரை மாற்ற அதிகாரம் இல்லை என்பது தெரிந்தது.அதானி ஏர்போர்ட் என பெயரிடப்பட்டதால் எதிர்காலத்தில் அதே பெயர் தொடரும் வாய்ப்பிருந்தது. அதானி நிறுவனமே இந்த விமான நிலையத்தை கட்டியது என்ற தோற்றம் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
15-செப்-202106:17:32 IST Report Abuse
NicoleThomson செமயா ஆடுறாங்க இந்த அதானி , ஆப்பு வெச்சாரு ஆல்வா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X