இந்தியா

நஞ்சன்கூடு அருகே புராதன கோவில் இடிப்பு மைசூரு பா.ஜ., -- எம்.பி., சிம்ஹா 'கிடுக்கி'

Added : செப் 13, 2021
Share
Advertisement
மைசூரு : நஞ்சன்கூடு அருகே புராதன கோவிலை இடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மைசூரு மாவட்ட நிர்வாக நடவடிக்கைக்கு, பா.ஜ., -- எம்.பி., பிரதாப் சிம்ஹா அதிருப்தி தெரிவித்துள்ளார்.மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:மைசூரு முழுவதும், 90க்கும் மேற்பட்ட புராதன கோவில்கள் உள்ளன. இக்கோவில்களை இடித்துள்ளதால், மக்களின் உணர்வு புண்படுகிறது. இது குறித்து ஆலோசனை நடத்தினேன். ஹிந்து

மைசூரு : நஞ்சன்கூடு அருகே புராதன கோவிலை இடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரு மாவட்ட நிர்வாக நடவடிக்கைக்கு, பா.ஜ., -- எம்.பி., பிரதாப் சிம்ஹா அதிருப்தி தெரிவித்துள்ளார்.மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:மைசூரு முழுவதும், 90க்கும் மேற்பட்ட புராதன கோவில்கள் உள்ளன. இக்கோவில்களை இடித்துள்ளதால், மக்களின் உணர்வு புண்படுகிறது. இது குறித்து ஆலோசனை நடத்தினேன். ஹிந்து கோவில்களை மட்டும் குறி வைக்கின்றனர்.திருடர்கள், கொள்ளையர்கள் இரவு நேரத்தில் திருடுவது போல, கோவில்களை இடிப்பது சரியல்ல. வாயை திறந்தால் உச்சநீதிமன்றம் பெயரை கூறுகின்றனர்.

எங்களிடமும் உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது.கடந்த 2009ல் இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், 'ஆக்கிரமிப்பு இடத்தில், கோவில், தேவாலயம், மசூதி கட்ட விடக்கூடாது' என உத்தரவிட்டுள்ளது.இதை மீறி, காதமாரனஹள்ளியில், மசூதி கட்ட எப்படி அனுமதித்தனர். மாநில அரசு கோவில்களின் பட்டியலை, மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். 2010ல் பிறப்பித்த உத்தரவை, உடனடியாக திரும்ப பெற வேண்டும். மாற்று பட்டியலை உச்சநீதிமன்றத்திடம், தாக்கல் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் மாநிலம் முழுவதும், 'கோவில்களை காப்பாற்றுங்கள்' என்ற பெயரில், போராட்டம் நடத்த வேண்டி வரும்.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, மைசூரை மட்டும் மனதில் கொண்டு, இதைநான் கூறவில்லை. நாடு முழுவதும் பொருந்தும்படி பேசுகிறேன். எந்த பூர்வீகத்தையும் ஆய்வு செய்யாமல் திடீரென கோவில்களை இடித்து தள்ளுவது சரியல்ல. இத்தகைய சம்பவங்களை பொது சமுதாயம் ஒப்புக்கொள்ளாது.கோவில்களை தக்க வைத்துக்கொள்ள சட்டத்தில் வாய்ப்புள்ளதா அல்லது இடமாற்ற முடியுமா என்பதை, முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். கட்டாயம் என்றால் மட்டும், கோவில்களை அகற்றுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X